• முகப்பு
  • இலங்கை
  • பதுளை பசறை வீதியில் வெவ்வேறு இடங்களில் வீதி விபத்துக்கள்

பதுளை பசறை வீதியில் வெவ்வேறு இடங்களில் வீதி விபத்துக்கள்

ராமு தனராஜா

UPDATED: Sep 5, 2024, 8:15:55 AM

பதுளை பசறை பிரதான வீதியில் வெவ்வேறு இடங்களில் வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பசறை வீதியில் 10 ம் கட்டைக்கு அருகாமையில் பதுளையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான போது லொறியில் சாரதி மாத்திரமே பயணித்த தாகவும் இருப்பினும் சாரதிக்கு காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.original/img-20240902-wa0045
விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 

மேலும் பசறை பதுளை வீதியில் 5 ம் கட்டைப் பகுதியில் பசறை பக்கம் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பார ஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி வீதியின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கடவையில் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது. 

குறித்த இரு சம்பவங்களும் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

VIDEOS

Recommended