மத்திய மாகாணத்தில் உள்ள சுற்றுலா வலயங்களை பிரபல்யப்படுத்தும் நிகழ்வு
ஜே.எம்.ஹாபீஸ்
UPDATED: Oct 29, 2024, 6:51:28 AM
மத்திய மாகாணத்தில் உள்ள சுற்றுலா வலயங்களை பிரபல்யப்படுத்தும் நிகழ்வு ஒன்று அண்மையில் கண்டி, ஹங்கிரனகெத்த பிதேசத்தில உள்ள மந்தாரம் நுவர என்ற இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
உலகிற்குக் கிடைத்துள்ள இயற்கையின் தனித்துவமான ஒரு கொடையாக விளங்கும் 'மந்தாரம்நுவர' சுற்றுலா வலயத்தை அடிப்படையாக வைத்து இது இடம் பெற்றது. இதன் இயற்கை அழகை வெளிப்படுத்துவதன் மூலம் இலங்கையில் நிலையான சுற்றுலா துறை ஒன்றை மேம்படுததைுவதற்கு பங்களிப்பு செய்வதே இதன் பிரதான நோக்கம் என அங்கு இதனை ஏற்பாடு செய்திருந்த மந்தாரம்நுவர சுற்றுலா வட்டத்தினால் தெரிவிக்கப்பட்டது.
இவ்வைபவத்திற்கு சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர்கள் சங்கம் (CPTGLA) பூரண பங்களிப்பை வழங்கி இருந்தது. கொலபத்தன, கபரகல மற்றும் எத்தினிகல ஆகிய அழகிய நீர்வீழ்ச்சிகளை பார்வையிட சுற்றுலத்துறையினரை அழைக்கும் நடவடிக்கைகளும் மற்றும் பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்பு அம்சங்களும் உள்ளடங்கியதாக இது அமைந்திருந்தது.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 28-10-2024
மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, மத்திய மாகாண வர்த்தக, வர்த்தக மற்றும் சுற்றுலா திணைக்கள பணிப்பாளர் எம்.யு. நிஷாந்த, ஹங்குரன்கெத்த பிரதேச செயலாளர் மிஹிரன் பண்டார, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் .எம், ஹேவாவசம் சுற்றுலா ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் வீர ஹெட்டியாராச்சி உட்பட இன்னும் பல அரச அதிகாரிகள் குழுவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அத்துடன் கண்டி, அனுராதபுரம் பிரதேசங்பனைச் சேர்ந்த ஹோட்டல் சங்கங்கள், இலங்கை சுற்றுலா ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் என்பவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.