• முகப்பு
  • இலங்கை
  • தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நுவரெலியாவில் நாளையும் (18) மக்கள் நடமாடும் சேவை

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நுவரெலியாவில் நாளையும் (18) மக்கள் நடமாடும் சேவை

அருள் ராஜ்

UPDATED: May 17, 2024, 4:48:14 PM

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நுவரெலியாவில் (17 மற்றும் 18) ஆகிய திகதிகளில் இரண்டு நாட்கள் மக்கள் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

original/img-20240517-wa0280
நுவரெலியாவுக்கு மாதிரி SMART எதிர்காலம்" எனும் தொணியில் இந்த மக்கள் நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபை சினி சிட்டா. மைதான மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வின் முதல் நாள் நிகழ்வு சம்பிரதாய முறைப்படி (17) காலை ஆரம்பிக்கப்பட்டது.

original/img-20240517-wa0278
(17) மற்றும் (18) ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்படும் பொதுமக்கள நடமாடும் சேவயின் முதல் நாள் நிகழ்வு இன்று (17) காலை முதல் ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார,நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருடன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்கா,சீ.பீ. ரத்நாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



இதில் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்களாக இளைஞர் யுவதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது தேவைகளை இலவசமாக பெற்று கொண்டமையும் குறிப்பிடத்தக்கது

VIDEOS

Recommended