எனது புதிய பாடல் நம்ம ஊரு பைலா - பொத்துவில் அஸ்மினின்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Nov 10, 2024, 6:03:05 AM

போர்ச்சுகீஸ் மொழியில் *பைலர்* என்றால் (Bailar) நடனமாடுதல் என்ற பொருள்படும். 

துள்ளல் இசையுடன் நகைச்சுவை இழையோட இப்பாடல்கள் உருவாக்கப்படுகின்றன.

பைலா இசை ஒரு நாட்டுப்புற கலை வடிவமாக இலங்கையில் பல நூற்றாண்டுகளாக பிரபலமாக இருந்து வருகிறது. 

1960-களின் தொடக்கத்தில், காவல்துறை அதிகாரியாக இருந்து பாடகராக மாறிய வாலி பாஸ்டியன்ஸ் மூலம் இது இலங்கையின் சிங்கள இசைக்கலாசாரத்திற்குள் புகுந்தது. அவரின் பாடல்களில் 6/8 ரிதத்தை சிங்கள பாடல்களுக்கு ஏற்ப மாறுபடுத்தினார். 

1970-களின் போது, எம். எஸ். பெர்னாண்டோ மற்றும் மாக்ஸ்வெல் மெண்டிஸ் போன்ற இசைக்கலைஞர்களின் முயற்சிகளால் "பைலா" ஒரு பரவலாக அறியப்பட்ட மற்றும் மதிக்கப்படும் இலங்கை நவீன இசை வடிவமாக மாறியது.

அதனைத்தொடர்ந்து இலங்கையில் பைலா பாடல்கள் தமிழில் வெளிவந்து உலகமெங்கும் பிரசித்திபெற்றன.

இன்றும் தமிழகத்தில் கூட இலங்கைப் பாடல்களாக "பைலா" பாடல்களே கருதப்பட்டு வருகின்றன.

தமிழ் திரைப்பட பாடல்களுக்கும் பைலா பாடல்களுக்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது.

"பைலா" பாடலை பைலா பாடல் மன நிலையோடு கேட்டால் மட்டுமே ரசிக்க முடியும்.

"நம்ம ஊரு பைலா" நான் எழுதிய இரண்டாவது பைலா பாடலாகும்.

அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை இசையமைப்பாளர் அருண்குமாரசாமி இசையில் இப்பாடலை நான் எழுதியுள்ளேன்.

தமிழ் திரைப்பட பின்னணிப்பாடகர் விஎம் மகாலிங்கம் இப்பாடலை பாடியுள்ளார்.பாடலை கதிர் ராஜசேகரம் இயக்க 

சுமதி குமாரசாமி தயாரித்துள்ளார்.இலங்கையை சேர்ந்த இளம் கலைஞர்கள் பாடலில் நடித்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொரானா காலத்தில் எழுதப்பட்ட இப்பாடல் இப்போதுதான் வெளிவந்துள்ளது.

பாடலைப்பார்த்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்.

அன்புடன்,

 பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்



 

VIDEOS

Recommended