ஏன் தற்போதைய அரசை சிறுபான்மை ஆதரிக்கக் கூடாது - Dr M.H.M. WAZEER. LLB
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 21, 2024, 4:17:23 AM
சிந்தியுங்கள் அதன் பின் செயற்படுங்கள்ஏன் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கக்கூடாது?
முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை, உடமைகளை இழந்த போது இந்த சமூகத்திற்காக ஆதரவாக மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற தேசிய மக்கள் சக்தி குரல் கொடுத்த வரலாறு உண்டா?
ALSO READ | மாவனல்லை பதுரியாவில் சின்னம் சூட்டும் நிகழ்வு
ஈஸ்டர் தாக்குதலின் போது முஸ்லிம் சமூகத்தை முழு பெரும்பான்மைச் சமூகமும் தீவிரவாதிகளாக சித்தரித்த போது முஸ்லிம் சமூகத்திற்காக மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற தேசிய மக்கள் சக்தி குரல் கொடுத்த வரலாறு உண்டா?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் காலத்தில் கொரோனவினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது அதற்கெதிராக மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற தேசிய மக்கள் சக்தி குரல் கொடுத்த வரலாறு உண்டா?
பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்து நமது இளைஞர்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்தி கைது செய்தபோது அதற்கெதிராக மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற தேசிய மக்கள் சக்தி குரல் கொடுத்த வரலாறு உண்டா?
அலுத்கம, பேருவலை கலவரங்களின்போது உயிர்களை, உடமைகளை இழந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற தேசிய மக்கள் சக்தி குரல் கொடுத்த வரலாறு உண்டா?
அம்பாரை கலவரத்தின் போது முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற தேசிய மக்கள் சக்தி குரல் கொடுத்த வரலாறு உண்டா?
முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் இராஜினாமா செய்ய வேண்டுமென்று தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்ககள் உண்ணாவிரதம் இருந்தபோது அவர்களுக்கெதிராக மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற தேசிய மக்கள் சக்தி குரல் கொடுத்த வரலாறு உண்டா?
ALSO READ | ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்ட மேற்கிந்திய அணி
கண்டி திகன கலவரங்களின்போது உயிர்களை, உடமைகளை இழந்த போது அப்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற தேசிய மக்கள் சக்தி குரல் கொடுத்த வரலாறு உண்டா?
ஏன் ரிஷாத் பதியுத்தீன் என்கின்ற மனித நேயத்தை ஆதரிக்க வேண்டும்?
முஸ்லிம் சமூகம் தன் உரிமைளை, உடமையை இழந்து இந்த நாட்டின் இனவாதத்தின் அலையில் அகப்பட்டு அல்லுண்டபோது இந்த சமூகத்திற்காக ஒலித்த ஒரு உறுதியான குரல்
ஈஸ்டர் தாக்குதலின் போது முஸ்லிம் சமூகத்தை முழு பெரும்பான்மை சமூகமும் தீவிரவாதிகளாக சித்தரித்த போது நமக்காக ஒலித்து உறுதியான குரல்
கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது அதற்குகெதிராக போராடி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் நம்மை கண்டுகொள்ளதா நிலையில் சர்வதேசத்திற்கு கொண்டு சென்று (இம்ரான் கானை கூட்டி வந்து) ஜனாஸா எரிப்பை நிறுத்தியதும் நமது உறுதியான குரல் நன்றியுள்ள நமது சமூகம் மறக்காமல் நினைவு கூறும் பெயர் ரிஷாத் பதியுத்தீனாகும்.
பயங்கரவாத தடை சட்டத்தை கொண்டு வந்து நமது இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, முத்திரை குத்தி கைது செய்த போது அதற்கு எதிராக போராடி பயங்கரவாத தடைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் கிழித்தெறிந்து நமக்காக குரல் கொடுத்த உறுதியான குரல் சமூகத்தின் விடுதலை குரல் என்று நோக்குகையில் அது ரிஷாத் பதியுத்தீன் என்கின்ற சமூக சிந்தனையாளர் என்பது உறுதி.
இந்த நாட்டில் யார் ஆட்சி செய்தாலும் அவர்களுக்கு அஞ்சாமல், அடிபணியாமல் இந்த முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்க கூடிய நமது உறுதியான குரலாக தலைவர் ரிஷாத் பதியுத்தீன் மட்டுமே.
இந்த நாட்டில் தன் சமூகத்திற்காக அமைச்சசுப் பதவிகளை துறந்து சர்வதேசத்திற்கு அழுத்தங்களை கொடுத்து நமக்கான தீர்வினை பெற்று தந்த நமது உறுதியான குரல் ரிஷாத் பதியுத்தீன் தான்.
அலுத்கம, பேருவளை கலவரங்களின் போது நாம் இழந்த உயிர் உடமைகளை அன்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்து எந்த பயனும் அற்றுப் போயிருந்த நிலையில், நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் நாட்டு தூதுவர்களையும் அழைத்து இந்த பேரினவாத கலவரங்களை சர்வதேசத்திற்குச் கொண்டு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தம் கொடுத்து இனவாத கும்பலை அடக்கி ஒடுக்கிய நம் உறுதியான குரல் ரிஷாத் பதியுத்தீன் என்கின்ற ஆளுமையே.
எனவே முஸ்லிம் மக்களே உங்களுக்கான தலைமைத்துவத்தையும், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பெறுப்பு உங்களுக்கு உண்டு என்பதை மறந்து வீடாதீர்கள்.
நம் தெரிவுகளில் தவறிழைத்து விட்டு இன்னும் 05 வருடங்களுக்கு அவதிப்பட்டிருக்காமல், இம்முறை அமையப்போகின்ற பாராளுமன்றம் கருத்தியல் சார்த்தாக இருக்கும். அதற்கான சரியான தெரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அதனது தேசிய தலைவருமான ரிஷாத் பதியுதீன் மட்டுமே.
Dr M.H.M. WAZEER. LLB (Hons)JUSTICE OF THE PEACE FOR THE (WHOLE ISLAND)
Organiser For
SRILANKA FREEDOM PARTY
KALMUNAI ELACTORATE
AMPARA டிஸ்ட்ரிக்ட்