மடவல பஸார் ஹில்கன்றி பாடசாலையின் பரிசளிப்பு வைபவம்

ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Aug 1, 2024, 1:50:10 PM

கண்டி, மடவல பஸார் ஹில்கன்றி பாடசாலையின்  வருடத்திற்கான பரிசளிப்பு வைபவம் பாடசாலை கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஏ.எம். ஜாசில் தலைமையில் இடம் பெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக லைசியம் குழும தலைவர் நிக்கித்த கிரேரு கலந்து கொண்டார்.

விசேட அதிதிகளாக ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் எம்.டி.எம்.ஜாசில், மக்கள் வங்கியின் ஓய்வு பெற்ற முகாமையாளர் எம்.எஸ்.எம்.ஜாபிர், ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி மஸாஹிரா ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினர். 

இங்கு உரையாற்றி பிரதம அதிதி தெரிவித்தாவது-

தான் அவுஸ்திரேலியாவில் உயர் கல்வி மற்றும் பட்டப் படிப்புக்களை மேற்கொண்ட சமயம் தான் அங்கு கண்ட அனுபவத்தை இங்கு குறிப்பிடவேண்டும்.

 நாம் எமது சொந்த முயற்சியில் தொழில் செய்து கல்வி கற்றக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். எனக்கு தாராளமாக வசதி வாய்ப்புக்கள் இருந்தும் நானும் பகுதி நேரம் வேலை பார்த்தே எனது கல்வியைத் தொடர்ந்தேன்.

நான் பகுதி நேர அடிப்படையில் பல தொழில்கள் செய்தேன். மோட்டார் வாகனம் கூடக் கழுவினேன். நான் அவற்றைக் கூற வெட்கப்பட வில்லை. அவ்வாறு விடா முயற்சியாலும் பெற்றோர்களின் வழி காட்டலிலும் இன்று நான் 49 நிறுவனங்களுக்கு தலைவராக உள்ளேன். நாம் ஒரு நிறுவனத்தை சிறிதாக ஆரம்பித்து பின் பெரிதாக வளர்க்கவேண்டும்.

 ஆரம்பத்தலேபெரிதாகமேறகொள்ள முயற்சிப்பதால்தான் டைகள் ஏற்படுகினறன. நாம் மற்றவருடன் இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே எனது இரகசியம் என்றார். இன்னும் பலர் உரையாற்றினர். 

 

VIDEOS

Recommended