தலைவர் றிசாத் பதியுதீனை தோற்கடிக்க எடுக்கும் முயற்சிகளை துடைத்தெறிய ஒன்றுபடுவோம் - இஸ்ஸதீன் றியாஸ்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Nov 9, 2024, 7:10:20 AM
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்து வந்த ஒரு தலைவராக இன்றும் மக்கள் அவரை நோக்குகின்றனர்.
ALSO READ | வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
இதற்கு காரணங்கள் பல உண்டு அதிலும் குறிப்பாக பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் அவரது குரலுக்கான கணம் வெகுதியானது என்பது தான் முக்கிய அம்சமாகும்.
ஓவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அரசியல் தலைமைகள் இந்த இடைவெளியினை நிரப்புவார்கள்,அதில் ஒருவராக தான் நாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான றிசாத் பதியுதீனை பார்க்கின்றோம்.
கடந்த 2 தசாப்த காலங்களுக்குள் எமது நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தொடர் இனவாத செயற்பாடுகளின் போதெல்லாம்,இம்மக்களுக்காக துணிந்து பேச வேண்டிய இடங்களில் பேசி எமது மக்களுக்கு அளப்பறிய சேவையினை ஆற்றியவராக தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் காணப்படுவது ஒரு புரமிருக்க,மறுபுரத்தில 1990 ஆம் ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பலவந்த வெளியேற்றத்திற்குட்பட்டு தானும்,தமது சமூகமும் பல்வேறு துன்பியல் வாழ்வினை அனுபவித்த ஒருவராகவும் றிசாத் பதியுதீன் என்கின்ற ஆளுமையினை நாம் புடம் போட்டுக்காட்டலாம்.
இப்படிப்பட்ட ஒரு தலைமைத்துவத்தை துவம்சம் செய்வதற்கும்,அது போன்று அழிப்பதற்கும் மேற்கொள்ளும்,சதிகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஒன்றாக காணமுடிகின்றது.
குறிப்பாக வன்னி மாவட்ட மக்கள் இது தொடர்பில் விழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த கட்டுரையினை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவராக இருக்கும் றிசாத் பதியுதீன் அவர்களை அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்குவதற்காக எமது சமூகத்தின் ஒரு சிலர் பலரது கொன்த்தராத்துக்களை எடுத்துள்ளதை இந்த தேர்தல் களத்தில் களம் இறக்கபப்ட்டுள்ளதை காணுகின்றோம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஆட்சி மாற்றம் என்று ஒரு அணி ஓடிய வேளை இன்னுமொரு அணி றிசாத் பதியுதீன் அவர்கள் சார்ந்து நின்ற சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதன் மூலம் றிசாத் பதியுதீனின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று பல வேட்பாளர்களிடம் சேர்ந்தனர்.
இறுதியில் இவர்களை இறைவன் சமூகத்திற்கு காட்டி கொடுத்த்தான் யார் என்பதையும் எம்மால் கண்டுகொள்ள முடிந்தது.
இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் யாரோடு நின்றார்களோ,அவர்கள் இவர்களை விரட்டடியதினால் இன்று இன்னுமொரு கட்சியோடு இணைந்துள்ளனர்.
இன்றைய அரசியலில் றிசாத் பதியுதீன் அவர்களை இல்லாமல் ஆக்குவதன் மூலம் எதனை இந்த மக்களுக்கு மேற்படி செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் செய்ய முனைகின்றார்கள் என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டியுள்ளது.
ALSO READ | கர்மா என்றால் என்ன ?
இவர்களின் திட்டமானது தமக்கு சில அற்ப சொற்ப கைமாறுகளை சில அரச சார்பற்ற அமைப்புக்களும்,கட்சிகளும் கொடுக்கின்றதை பெறுபவர்கள் என்பது தெளிவாக புலனாகின்றது.
ஆனால் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் கடந்த காலங்களில் மக்கள் பிரதி நிதியாக இல்லாமல் போயிருந்தால் இன்னும் எமது வடபுல முஸ்லிம் சமூகம் எங்கு சென்றிருக்கும் என்பதை இவர்கள் உணராமல் இருப்பதானது வேடிக்கையானதாகும்.
வடபுல முஸ்லிம் சமூகம் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றத்தின் பிற்பாடு எதிர் கொண்ட வலிகள் ஏராளம்.இதிலும் குறிப்பாக மீள்குடியேற்ற செயற்பாடுகளின் போது வடபுலத்தில் வாழும் அனைத்து சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பணிகளை எவரும் தமது ஆயுளில் மறக்க முடியாது.
மீள்குடியேற்றம் என்பது பிரசவ வலியினை விடவும் மிகவும் கஷ்டமானது என்பதை புரிந்தால் றிசாத் பதியுதீன் என்னும் ஆத்மாவுக்கு எதிராக செயற்படுவார்களா என்று கேட்க நேரிடும்.
குறிப்பாக இந்த மீள்குடியேற்றத்தின் உண்மை வடிவமே தற்போதைய முசலி பிரதேசமாகும்.வீடுகள் அழிந்து,காணிகள் காடுகளாகி,எமது மக்கள் வாழ்ந்த இடங்கள் அடையாளம் தெரியாமல் இருந்த போது,தனது அமைச்சுப் பலத்தினையும்,ஆட்சியாளர்களின் மனங்களில் அவர் கொண்டிருந்த நெருக்கமும் மீண்டும் முசலி பிரதேசத்திற்கான முகவரியினை புத்தாக்கம் செய்தது.
முசலிக்குள் புதையுண்ட குண்டுகள் அகற்றப்பட்டன,முற்புதர்கள் நிறைந்த பாதைகள்,காப்பர்ட் பாதைகாளக மாறின,இருளில் மூழ்கிய மறிச்சுக்கட்டி முதல் முருங்கன் வரையான கிராமங்கள் ஒளியினை பெற்றன,சிதைக்கப்பட்ட பள்ளிகளும்,பாடசாலைகளும்,மீண்டும் முகப்புக்களை காட்ட துவங்கின,கற்றலும்,ஓதலும்,இபாதத்களும் நிறைந்த பூமியாக மீண்டும் உருவெடுத்தன,அரச கட்டிடங்கள்,வைத்தியசாலைகள்,போக்குவரத்து வசதிகள்,விவசாயம்,மீன்பிடி மற்றும் அரச நியமனங்கள் இவற்றையெல்லாம் கொண்டுவருவதற்கு இறைவனின் உதவியால் அiனைத்து முயற்சிகளையும் செய்து,அனைத்து மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றத்தை செய்தவரை எமது பிரதேசத்தை சேர்ந்த சிலரினால் வஞ்சிக்கப்படுகின்றார் றிசாத் பதியுதீன் அவர்கள் என்பதை கவலையுடன் தெரிவிக்கவிரும்புகின்றேன்.
இவவாறு வன்னிக்கு மட்டுமல்லாமல் இலங்கை தேசம் எங்கும் வாழும் எமது சமூகத்திற்கும்,இது போன்று தேவை அறிந்து ஏனைய சகோதர சமூகத்திற்கும் பணியாற்றும் எமது வன்னித் தலைமையின் குரலை இந்த தேர்தலில் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று வீதிச் சண்டை போடுகின்ற படித்தவர்கள்,பண்புள்ளவர்கள் என்று கூறுகின்றவர்களின் செயற்பாடுகளால் எமது முசலி பிரதேசமும்,வன்னி பிரதேசமும் வெற்கி தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெற்றி பெற முடியாது என்று தெரிந்து கொண்டு பல பெயர்களிலான கட்சியும்,இதனது வேட்பாளர்களும் எமது மக்களது வாக்குகளை பிரித்து எமது பிரதி நிதித்துவத்தை இழக்கச் செய்து,அவர்களுடைய கொன்தராத்தினை நிறைவேற்ற எடுக்கும் எத்தனங்களை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களினால் வழங்கப்பட்ட பதவிகளை பெற்று தமது காலத்தில் செய்தது என்ன என்று மக்களாகிய நாம் கேட்க வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது.
தமது சொந்த தேவைகளை முன்னுரிமைபடுத்தியதும்,மக்கள் கேள்வி கேற்கின்ற போது அதற்கு முகம் கொடுக்க முடியாமல் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும்,பணத்துக்கு சோரம் போய் மக்களை காட்டிக் கொடுக்கின்ற துரோகத்தினை செய்வதை மக்கள் ஆகிய நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
ஓவ்வொரு தேர்தலுக்கும் மக்களுக்கு தெரியாத பதில் சொல்ல வக்கில்லாத தலைவர்களை சுமந்து வந்து அவர்களை தேசிய பட்டியலில் எம்பிக்களாக செல்வதற்கு பெற்றுக் கொண்ட கைமாறுக்கு மக்களின் வாக்குகளை சிதைத்து தேவையுள்ள வடபுல மக்களின் எதிர்கால கனவினை சீரழிக்கும் வேலைகளை இவர்கள் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்பதை இந்த சில நாட்களுக்குள்ளாவது நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரதேசவாதம்,ஊர் வாதங்களை மக்களுக்குள் விதைத்து அதனூடாக தமது சொந்த தேவைகளை நிறைவு செய்யும் வக்கிர புத்தி கொண்டவர்களின் வலையில் சிக்குண்டோம் என்றால் எமது அடுத்த சந்ததியினருக்கு நாம் செய்யும் பெரும் அநியாயமாகும் என்பதை நாங்கள் விளங்கியாக வேண்டும்,
அன்பார்ந்த எனது உறவுகளே,
இந்த தேர்தலானது எமது சேவைக்கான பிரதி நிதியினை தெரிவு செய்யும் ஒன்றாகும்,செயற்திறமை கொண்ட, கடந்த காலங்களில் எமக்காக பலதையும் செய்து கொடுத்த ,அதனது தொடரான எஞ்சியவற்றையும் செய்து தரக் கூடியவரை தான் நாங்கள் தெரிவு செய்ய வேண்டும்.அது றிசாத் பதியுதீன் அவர்கள் என்பதை நீங்கள் உங்களது உள்ளங்களில் இருந்து ஒரு போதும் அகற்றிவிடக் கூடாது.
தேர்தல் சீசனுக்கு பெயர் கூட உச்சரிக்க முடியாத நடிகர்களையும்,எமது சமூகத்திற்கு எவ்வித உதவியினை செய்யாத,எவ்வித துன்பத்தின் போது இவ்வாறானதொரு ஊர் இருக்கின்றதா என்று தெரியாத எங்கிருக்கின்றவர்களை எல்லாம் அழைத்து வந்து இவர் எமது தலைவர்,இவர் வெற்றி பெற்றதும் எல்லாவற்றையும் செய்வார் என்று உங்களை அவர்களுக்கு காட்டி மொத்தமாக சுருட்டிக் கொள்ளும் ஆசாமிகள் தொடர்பில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற விடயத்தை சொல்லுவது எனது கடமை என உணர்கின்றேன்.
இந்த நிலையில் எஞ்சியுள்ள இன்னும் சில தினங்களில் உங்களை சந்திக்க பொருட்களுடன் வருவார்கள்,வாங்குங்கள்,வாங்காதீர்கள் என்று நாம் சொல்லமாட்டோம்.நன்மை எங்கிருக்கின்றதோ அங்கு தான் எமது உள்ளம் இருக்க வேண்டும்.சில தற்காலிக பொருட்களுக்காக நீங்கள் உங்களது உரிமையினை இழக்கும் நிலைக்கு சென்றுவிடாதீர்கள்.
இவ்வளவு காலமும் இவ்வாறானதொரு துர்ப்பாக்கிய நிலை எமது பிரதேசத்துக்கும்,மக்களுக்கும் ஏற்படவில்லை.இதனை புதிய அநாகரிக கலாச்சாரமாக சிலர் புகுத்துவதற்கு முனைகின்றார்கள்.இந்த நிலை தொடர்ந்தால் நம்மை கொத்தடிமைகளாக மாற்றிவிடுவார்கள்.
துரதிஷ்டம் எமது பிரதேசத்தின் சிலர் அரசியல் வியாபாரிகளாக மாறியதன் விளைவே இது என்பதை நீங்கள் புரிந்து எதிர்வரும் 14 ஆம் திகதி உங்களது சரியான தெரிவாக தொலைபேசி சின்னத்திற்கும், இலக்கம் 1 இல் போட்டியிடும் எமது மண்ணின் iமைந்தன்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கும் நீங்கள் வாக்களிப்பதன் மூலம் உங்களது சமூகக் கடமையினை நிறைவேற்றியுள்ளீர்கள் என்ற திருப்த்தி கொள்வதுடன்,தலைவரின் முகத்தை நீங்கள் பார்க்கின்ற போது நிச்சயம் உங்களது உள்ளங்கள் மகிழ்ச்சி கொள்ளும் என்பது உறுதியாகும்.
இறைவன், நமது எண்ணங்களை தூய்மைப்படுத்தி எம்மை பொருந்திக் கொள்ளட்டும்
இவ்வண்ணம்
இஸ்ஸதீன் றியாஸ் (உயர்பீட உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)