• முகப்பு
  • இலங்கை
  • தேர்தலுக்காக மட்டும் இஷாம் மரைக்கார் முன் வந்து வாக்கு கேட்கவில்லை

தேர்தலுக்காக மட்டும் இஷாம் மரைக்கார் முன் வந்து வாக்கு கேட்கவில்லை

புத்தளம் செய்தியாளர்

UPDATED: Nov 10, 2024, 12:41:52 PM

மர்ஹூம் பாயிசின் அரசியல் பிரவேசம் இந்த பிரதேசத்துக்கு விடுதலையாக இருந்தது, அவர் விட்டுச் சென்ற அந்த பாதையினை நாம் முன்னெடுப்பது புத்தலத்து சமூகம் மீது கடமையாகும் என்று இரட்டை கொடி சின்னத்தில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் இஷாம் மரிக்கார் கூறினார்.original/img_20241110_173055_copy_1600x736
துறை சார்ந்தவர்களுடனான கலந்துரையாடலின் போது இரட்டை கொடி சின்னத்தில் போட்டியிடுகின்ற மறைக்கார் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் இங்கு அவர் குறிப்பிடுகையில் -

இஷாம் மரைக்கார் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மேடைகளில் பேசுகிறார்கள். அவர்கள் என் மீது வைக்கின்ற குற்றச்சாட்டுகள் என்ன?

 நான் ஊழல் மோசடி செய்தவனா அல்லது கல்விசாரா அறிவில்லாதவனா, சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடாத ஒருவனா என்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை.

 மாறாக அவர் வெற்றி பெறுவாரா என்று மட்டும் மேடைகளில் கேட்கின்றனர்

 தேர்தலுக்காக மட்டும் இஷாம் மரைக்கார் முன் வந்து வாக்கு கேட்கவில்லை. புத்தளத்தின் பல்வேறு பிரச்சனைகளின் போது இஷா மரைக்கார் அரசியல் அதிகாரம் இல்லாத காலங்களிலும் கூட முன்வந்துள்ளார்.

 சமூகத்துக்கு இழைக்கப்படுகின்ற துரோகங்களை தொடர்ந்து தட்டிக் கேட்பது என்னுடைய பணி, அதை எவர்களாலும் தடுத்து நிறுத்த முடியாது.

original/img-20241018-wa0014_copy_386x512_1
கடந்த 12 வருடங்களாக நாங்கள் சமூகம் சார்ந்த அனைத்து விடயங்களிலும் பங்களிப்பு செய்துள்ளோம்.

 விமர்சனங்களை தாண்டி அரசியலை தைரியமாக துணிந்து செய்வதற்கு எங்களுக்கு மனதுணிவு இருக்கிறது ஏனென்றால் நாங்கள் ஊழல் மோசடிகளில், பொய் வாக்குறுதிகளில் நிலைத்து நிற்பவர்கள் அல்ல.

 உண்மையைச் சொல்லி எதார்த்தத்தை பேசி மக்களுக்கு புரியவைத்து எமது உரிமையையும் எமது வளங்களையும் பாதுகாப்பதற்காகவே நாம் நம் களம் இறங்கி இருக்கின்றோம்.

 இந்த பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் பொருத்தமானவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தலில் அனுரகுமார தேசானுக்கு 48 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார். 58% பெரும்பான்மையான மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை ஜனாதிபதி என்று.

 எனவேதான் இந்த பாராளுமன்றம் கூட சங்கடம் நிறைந்த ஒரு பாராளுமன்றம் ஆகவே அமையப் போகிறது .

ஜனாதிபதியாக இருக்கின்ற அனுர குமார திசா னாயாக்கே ஆட்சியில் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்கலாம்.

அமையப் போகின்ற பாராளுமன்றம் பலமிக்கத்தாக அமைவது மட்டும் முக்கியமல்ல. 

அதில் எமது புத்தளம் மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.

பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி வாக்குகளை பெறுகின்ற தேவை எமக்கில்லை. பாராளுமன்றம் என்பது சட்டங்களை வகுக்கின்ற இட ம்.

ஏன் யாருக்கும் கட்டுப்பட்டு அரசியல் கைதியாக இருந்து அரசியல் செய்ய முடியாது என்றும் இஷாம் மரைக்கார் கூறினார்.

பாசில் என்பவருக்கு தேர்தல் கேட்பதற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது.ஆனால் அவர் சேர்ந்துள்ள கூட்டணி பிழையானது. அவருக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் அலிசப்ரியின் வெற்றியை உறுதிப்படுத்தலாம். அவ்வாறு பாசில் அலி சப் ரிக்கு வாக்கு சேர்ப்பதினால் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று இதன் போது கூறவிரும் புகின்றேன் என்றும் கூறினார்.

கலாநிதி இல்ஹாம் மறைக்காரும் இதன் போதும் உரையாற்றினார். 

 



 

VIDEOS

Recommended