எம்மீது சுமத்தப்படும் போலி குற்றச்சாத்துக்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்லுவோம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Nov 3, 2024, 12:18:22 PM
எம் மீதும் எமது கட்சியின் மீதும் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் அபத்தமானது என ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிரபா கணேசன் கூறினார்.
ALSO READ | திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துரைக்கையில் -
எமது கட்சி ஆனது இந்த நாட்டில் மக்களுக்கான அரசியலை செய்கின்ற ஒரு கட்சி. எமது கட்சி எந்த நிறுவனமோ அல்லது அமைப்புக்களிடமிருந்தோ ஒரு சதமேனும் இதுவரைக்கும் பெற்றதில்லை.எதிர்காலத்திளும் பெறப் போவதுமில்லை.
எமக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை பலர் முன்வைத்து வருகிறார்கள் இதில் எவ்வித உண்மையும் இல்லை இது தொடர்பில் நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கின்றோம். நீதிமன்றத்தின் ஊடாக இதற்கான முமுடிவை பெருவோம்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் 20 மாவட்டங்களில் நாங்கள் எமது 269 வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றோம்.
கேகாலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் ஒருவர் எமக்கு எதிராக குற்றசாட்டு ஒன்றை முன் வைத்திருக்கிறார்.அதில் எவ்வித உண்மை இல்லை அதை அவர் நிரூபிக்க வேண்டும்.
இல்லாத பட்சத்தில் அவருக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு 100 மில்லியன் ரூபா நஷ்டயீடு கோரவுள்ளோம்.
இந்த நாட்டின் மூன்றாவது சக்தியாக நாம் வளர்ந்து வருகின்றோம். இதனை கண்டு அச்சம் கொண்டவர்கள் எமக்கு எதிராக செயற்படுகின்றனர்.
இவ்வாரான செயற்பாடுகள் மூலம் எம்மை ஆச்சுருத்தலாம் என நினைக்கின்றனர்.
அவ்வாறு அச்சம் கொள்ளும் தலைவர் நானல்ல என்பதை கூற விரும்புகின்றேன்.
எம்மீது சுமத்தும் குற்றச்சாட்டை நிரூபித்தால் கட்சியின் தலைவர் பதவியினை துறந்து, கட்சியினையும் கலைத்துவிடுவேன் என்றும் பிரபா கணேஷன் கூறினார்.