• முகப்பு
  • இலங்கை
  • இஸ்ரேலிய படைகள் பலஸ்தீன்  காஸா மற்றும் லெபனான் மீது மேற்கொள்ளும் தாக்குதலுக்கு கண்டனம்

இஸ்ரேலிய படைகள் பலஸ்தீன்  காஸா மற்றும் லெபனான் மீது மேற்கொள்ளும் தாக்குதலுக்கு கண்டனம்

ஏ.எஸ்.எம்.ஜாவித்

UPDATED: Oct 9, 2024, 4:07:18 PM

இஸ்ரேலிய படைகள் பலஸ்தீன்  காஸா மற்றும் லெபனான் போன்ற முஸ்லிம் நாடுகள் மீதும் அங்குள்ள   அப்பாவி மக்கள் மீதும் மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான படுகொலைகளை கண்டித்தும் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த மக்களின் புகைப்பட மற்றும் கானொலி காட்சிகள் காண்பித்தும் கமாஸ் இயக்கத்தினால் காஸா மக்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விசேட தடுப்புத் தாக்குதலுக்கு ஒரு வருடமாவதையும் முன்னிட்டும்  கண்டன கூட்டம் ஒன்றினை  பிறீபலஸ்தீன் மூமண்ட் ஒப் சிறிலங்கா அமைப்பினால் இன்று மாலை கொழும்பு 9 தெமடகொட வை.எம்.எம்.ஏ தலைமைக் காரியலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


 
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான ஈரான் தூதரகத்தின் தூதுவர் கலாநிதி அலீ ரிஸா தெல்குஸ் மற்றும் விசேட அதிதிகளாக சவுத் ஆபிரிக்காவின் இலங்கைக்கான தூதரகத்தின் உயர் ஸ்தானிகர் சன்டிலி சால்க், நாரேகன்பிட்டி தர்மதுத விஹாரையின் விஹாராதிபதி அலுத்கம இன்டரத்தன தேரர், ஈரான் தூதரகத்தின் கலாசார கவுன்சிலர் கலாநிதி பி.எம்.குதர்சி, மனித உரிமைகள் அமைப்பு லங்காவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசீம், அரசியல் ஆர்வலர் சிராஸ் யூனூஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.


நிகழ்வின் உறுதியுரையை சகோதரர் ஸாமில் வழங்கினார் பலஸ்தீன் சிறுவர்களுக்கான அனுதாப மடலை சிறுமி அஸ்லிஹா சிஹான் வாசித்தார்.


 

இந்நிகழ்வில் பிறீபலஸ்தீன் மூமண்ட் ஒப் சிறிலங்கா அமைப்பின் (Free Palestine Movement of Sri Lanka )ஏற்பாட்டாளர்கள்,  வை.எம்.எம்.ஏயின் தலைவர் அம்ஹர் சரீப் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள், இளம் முஸ்லிம் மாதர் அமைப்பின் அமைப்பின் தலைவி பவாஸா தாஹா உள்ளிட்ட அங்கத்தவர்கள்,  கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் மொஹமட் ரசூல்டீன்,  ஈரான் தூதரக அதிகாரிகள்,  சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

VIDEOS

Recommended