• முகப்பு
  • இலங்கை
  • துணை பொதுச்செயலாளர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கின்றேன் - ஜீவன் தொண்டமான்

துணை பொதுச்செயலாளர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கின்றேன் - ஜீவன் தொண்டமான்

அமைச்சின் ஊடக பிரிவு

UPDATED: Jun 29, 2024, 3:46:22 AM

நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்  ஐக்கிய நாடுகள்(UN) துணை பொதுச்செயலாளர் அமினா மொகமட்டை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு சீனாவின் டேலியான் நகரில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார மாநாட்டின் போது நடந்ததாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்திப்பின் போது, அவர்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதன் போது, ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டதாவது.

 "நிலையான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) வடிவமைப்பாளராக அமினா மொகமட் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உலகத்தை மேம்படுத்தும் முயற்சிகள் எனக்கு மிகுந்த உந்துதலை அளிக்கின்றன."

இலங்கையின் சவால்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் பெருந்தோட்ட சமூகம் போன்ற பின்தங்கிய சமூகங்களின் நிலையை அவரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் மேலும், வறுமையைக் குறைக்கவும், சமூகங்களை மேம்படுத்தவும், நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) விரைவாக அடைவதற்கும், துணை பொதுச்செயலாளர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கின்றேன் எனவும் தெரிவித்ததாக சுட்டிக்கட்டியுள்ளார்.

 

VIDEOS

Recommended