• முகப்பு
  • இலங்கை
  • ஓட்டமாவடி மஜ்மா நகரில் உயிருக்காகப்போராடி வந்த யானை மரணம்

ஓட்டமாவடி மஜ்மா நகரில் உயிருக்காகப்போராடி வந்த யானை மரணம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

UPDATED: Sep 23, 2024, 3:02:22 PM

கடந்த சில தினங்களுக்கு முன்பு உபாதைக்குள்ளாகி எட்டு நாட்களாக எழுந்து நடக்க முடியாமல் உயிருக்காகப்போராடி வந்த 30 தொடக்கம் 35 வயது மதிக்கத்தக்க காட்டு யானை இன்று (23/09/2024) மாலை உயிர் இழந்துள்ளது. 

original/img-20240923-wa0184_copy_640x480
வனஜீவராசிகள் திணைக்களம், அக்கீல் எமர்ஜென்சி ஹெல்பிங் யூனிட் மற்றும் கல்குடா டைவர்ஸ் ஆகியவற்றால் தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளது..

மரணமடைந்த யானையின் பிரேத பரிசோதனை நாளை (24/09/2024) இடம் பெற்று புதைப்பதற்கான நடவடிக்கைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் ஓட்டமாவடி பிரதேச செயலகமும் மேற்கொண்டுள்ளனர்.

இதனைப் பராமரிக்கும் பணியில் அக்கீல் எமர்ஜென்சி ஹெல்பிங் யூனிட் மற்றும் கல்குடா டைவர்ஸ் அணியின் செயற்பாட்டாளர் முஹம்மது ஹலீம் அதிக பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended