வைத்தியர் KLM.மாஹிரூனுக்கு சேவை நலன் பாராட்டு
அம்ரி அஹமத் -பாலமுனை செய்தியாளர்
UPDATED: Dec 10, 2024, 7:29:26 AM
பாலமுனை இளைஞர்கள் சபையினால் வைத்தியர் KLM.மாஹிரூன் அவர்கள் வைத்திய துறையில் 30 வருட சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை பாராட்டி கௌரவிப்பு செய்யப்பட்டது.
அவரது இல்லம் சென்று அன்னவருக்கான பணி நயப்பினை, சபையின் தலைவர் ALM.சீத் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட சபையின் ஆலோசகரும் சட்டவைத்திய அதிகாரியுரமான வைத்தியர் SM.றிபாஸ்தீன், பொறியியலாளர் MN.நௌசாத் ஆகியோர் இணைந்து ஒய்வு பெற்ற வைத்தியர் KLM.மாஹிரூன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், மற்றும் ஆலோசகரான பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் T. நிஷ்தார் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் AH.றிபாஸ் மற்றும் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள் இணைந்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.