• முகப்பு
  • இலங்கை
  • வாழும் கலை அறக்கட்டளை அமைப்பின் செயற்பாட்டை மலையகத்திலும் பலப்படுத்த ஒத்துழைப்பு - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குரு ஜீ

வாழும் கலை அறக்கட்டளை அமைப்பின் செயற்பாட்டை மலையகத்திலும் பலப்படுத்த ஒத்துழைப்பு - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குரு ஜீ

அருள் ராஜ்

UPDATED: May 19, 2024, 8:19:03 AM

இலங்கையில் மலையகத்திலும் வாழும் கலை அறக்கட்டளை நிறுவக செயற்பாடுகளை ஆரம்பிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்வைத்த வேண்டுகோளுக்கு உதவுவேன்.

original/img-20240519-wa0061
என ஆன்மீக குரு அமைதி தலைவர், வாழும் கலை பயிற்சி அறக்கட்டளை நிலையத்தின் தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி நுவரெலியாவில் (19) காலை இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.


இலங்கையில் வரலாற்றுக்குறிய நுவரெலியா சீத்தா எளிய பிரதேசத்தில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா  இன்று (19.05.2024)ஞாயிற்று கிழமை காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது.original/img-20240519-wa0069
இந்த மஹாகும்பாபிஷேக நிகழ்வில் கலந்து சிறப்பித்து ஆசி வழங்க இந்தியாவில் இருந்து ஆன்மீக குரு அமைதி தலைவர், வாழும் கலை பயிற்சி அறக்கட்டளை நிலையத்தின் தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு சனிக்கிழமை (18) வருகை தந்தார்.

இவ்வாறு வருகை தந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி (19) நுவரெலியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு சீத்தா எளிய அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்து ஆசியும் வழங்கினார்.

பின் நுவரெலியா "கிறேன்ட்" உல்லாச பயணிகள் ஹோட்டலுக்கு விஜயம் செய்த குருஜீ அங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி நீர் வளங்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.

இந்த சந்திப்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பி.இராஜதுறை,பாரத் அருள்சாமி உள்ளிட்ட இ.தொ.கா உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

original/img-20240519-wa0062
குறித்த சந்திப்பில் விசேடமாக கலந்து கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் இலங்கையில் மலையக மக்களின் நலத்திட்டத்திற்காக பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட குருஜீ வாழும் கலை அறக்கட்டளை அமைப்பின் செயற்பாட்டை மலையகத்திலும் பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும்,பயிற்சி நிலையங்களை ஆரம்பிக்க இடங்கள் உள்ளிட்ட வசதிகளை எதிர் பார்ப்பதாகவும் இதற்கான உதவிகளை தனது அறக்கட்டளை நிறுவகம் ஊடாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.


அத்துடன் ஆன்மீக கற்கை நெறி பாடசாலைகள் ஆரம்பித்தல், வாழும் கலை பயிற்சிகள், பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்புகள்,உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தனது அறக்கட்டளை ஊடாக செய்து தருவதாகவும் குருஜி இதன் போது தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended