ஈரான் ஜனாதிபதியின் மறைவு தொடர்பில் அனுரகுமார திசாநாயக்கவின் பதிவு
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: May 21, 2024, 3:20:48 PM
தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை மக்கள் சார்பாக, ஈரான் ஜனாதிபதி திடீர் மறைவுக்கு ஈரான் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ALSO READ | Krisha Kurup Indian actress Latest Photoshoot
சோகமான ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் பிற அரசியல்வாதிகள் மறைவு ஆழ்ந்த கவலையினைஏற்படுத்தியுள்ளது.
இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஈரான் தேசத்துடனும் உள்ளன.
ஜனாதிபதி ரைசியின் இழப்பு ஈரான், மத்திய கிழக்கு மற்றும் உலக சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க தக்கமாகும்.
நட்புறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு, நீர்மின் திட்டத்திற்காக அவர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமை, நிலையான அபிவிருத்தி மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான அவரது தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகும்.
அவரது பாரம்பரியம் தொடர்ந்து முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த துயரமான தருணத்தில் ஈரானுடன் எங்களது ஆழ்ந்த கவலையினை பகிர்ந்து கொள்கின்றோம் என்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.