தோட்ட தொழிலாளியிடமிருந்து தொழிற்சங்கங்களுக்கு 333 ரூபாய் சந்தா பணம் அறவிடப்படுகின்றது.
ராமு தனராஜா
UPDATED: Jun 17, 2024, 2:02:19 AM
ஒரு தோட்ட தொழிலாளி ஒரு நாள் தோட்டத்தில் வேலை செய்தாலும் அவர்களிடமிருந்து தொழிற்சங்கங்களுக்கு 333 ரூபாய் சந்தா பணம் அறவிடப்படுகின்றது. ஆனால் தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மே மாதம் 1700 ருபாய் சம்பளம் பெற்று கொடுப்பதாக மேசையை தட்டி மீசையை முறுக்கி ரஜனிகாந்த் வசனம் பேசினார்கள்.
ALSO READ | நடைபாதை நடப்பதற்கே! நடைபாதையை மீட்டுத் தாருங்கள் போக்குவரத்து காவல்துறைக்கு கோரிக்கை.
அரசாங்க தோட்டம் ஒன்றில் 1700 ரூபாய் கொடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. ஆனால் அவர்கள் எவ்வாறு கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. திறைசேரியில் இருந்தா அல்லது அரசாங்கத்தில் இருந்தா கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தற்போது கிடைக்கின்ற 1000 ரூபாய் சம்பளத்தில் தொழிற்சங்கங்களுக்கு கிடைக்க வேண்டிய 333 ரூபாய் சந்தா பணம் சரியாக மாதம் சம்பள நேரத்தில் சரியாக கிடைத்துவிடுகின்றது.
என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சை இன்று பசறை ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,
பதுளையை பொருத்த வரையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. பதுளையில் உள்ள பிரபல தொழிற்சங்கத்தின் தலைவர் சந்தாவை பெற்றுக் கொண்டு வேறு மாகாணத்தில் சென்று அங்கு சேவை செய்கின்றார்.
அதுமாத்திரமன்றி ஜெனிவா போன்ற நாடுகளுக்கு செல்கின்றார்கள் . அங்கு அவர்கள் பயணம் செல்வதற்கான செலவு மற்றும் தங்குமிட ஹோட்டல் வசதிகளுக்கான செலவுகள் எல்லாமே இந்த 333 சந்தா பணமே .
ALSO READ | மணலி பெயிண்ட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து
எனவே இதனைப் பார்க்கும் போது இதெல்லாம் அதாவது இந்த 1700ரூபாய சம்பளம் என்பது அரசியல் நாடகம் என்று தெட்ட தெளிவாக விளங்குகின்றது.
ஒரு தோட்ட தொழிலாளி மாதம் 15000 - 20000 வரை மாத்திரமே சம்பளம் பெறுகின்றார். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு இது போதுமனதல்ல. இதிலிருந்து இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தில் செய்து வைத்திருந்த சிறு சிறு நகைகளை அடகு வைத்து தனது அன்றாட செலவுகளுக்கு ஈடு செய்து வாழ்கை நடத்துகின்றார்கள் என்றும் கூறினார்.