• முகப்பு
  • விளையாட்டு
  • சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய நடை பவனி - ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு சாய்ந்தமருதில் வரவேற்பு.

சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய நடை பவனி - ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு சாய்ந்தமருதில் வரவேற்பு.

எஸ். அஷ்ரப்கான்

UPDATED: May 22, 2024, 4:25:21 PM

சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய நடை பவனியில் பல நாட்களாக ஈடுபட்டு சாய்ந்தமருதை வந்தடைந்த, அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் கிராமத்தைச் சேர்ந்த ஜனரஞ்சன கீர்த்திஸ்ரீ தேசபந்து வீரபுத்திர செல்டல் பெரேரா (ஓய்வு பெற்ற இலங்கை இராணுவ அதிகாரி) யை வரவேற்கும் நிகழ்வு தொழிலதிபர் இக்ரா மொபைல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் யு.எல். சத்தார் தலைமையில் நேற்று (21.05.2024) இடம்பெற்றது.


இலங்கை நாடு முழுவதுமாக நடைபவனியில் ஈடுபட்டுள்ள இவரை பாராட்டும் நிகழ்வினை பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் மற்றும் சாய்ந்தமருது பொலிசாரோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இவர், சாய்ந்தமருதை வந்தடைந்தபோது சாய்ந்தமருது இக்ரா நிறுவனத்திற்கு அருகாமையில் மாலை அனுவித்து கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக கல்முனை உப பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் சாய்ந்தமருது பொலிஸ் சிறு குற்ற பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி பத்மஸ்ரீ, கல்முனை இராணுவ இரண்டாம் கட்டளைத் தளபதி சாமர மதுரபெரும மற்றும் தொழிலதிபர் முஹம்மத் நளீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

VIDEOS

Recommended