சிவானந்தம் தர்மிகன் கிரிக்கெட் சுற்றுப்போட்டி JC வெளியீட்டு நிகழ்வு

ராமு தனராஜா

UPDATED: May 22, 2024, 6:30:02 AM

 ச.டனிஸ்காந் ( தர்மின்) தலைமையில் நடக்கவிருக்கும் சிவானந்தம் தர்மிகன் கிரிகட் சுற்றுத்தொடரின் ஆரம்ப நிகழ்வு 2011 ஆம் ஆண்டு உயர்தரமாணவர் ஒன்றியமும், டைனமிக் விளையாட்டு கழகமும் இணைந்து "BATCH BATTLE LEAGUE" சுற்றுப்போட்டி 26 ஆம் திகதி மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கின்றது.

original/img-20240522-wa0057
இன்றைய தினம் JC அறிமுகம். கழகத் தலைவரின் தலைமையிலே நடைபெற்றது .பிரதேச சபை ஒன்று கூட மண்டபத்தில் இது நடைபெற்றது.

ஜேசிபி வெளியீடு நிகழ்வில் பிரதமவிருந்தினராக காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் இலங்கை தமிழர் கட்சியின் தலைவருமான கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் கலந்து கொண்டார்.

 மேலும் நிர்வாக உத்தியோகத்தர் சிவானந்தம் முன்னாள் தவிசாளரும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கோபிகாந், சியாத்,ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் (ஜெயசிறில் உரையாற்றுகையில்) தர்மிகன் எமது நாட்டுக்காக வீரத்தை காட்டியவர் எமது காரைதீவு மண்ணின் பெருமையோடு வீர மரணம் அடைந்தார்.

அவர் களுத்துறையில் பாதாள கோ ஸ்டிக்கும் இவர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள கோஸ்டிக்கு எதிர்த்து துப்பாக்கி தன்னால் முடிந்த முயற்சியை எடுத்து அதற்கு பின் அவர்களுடைய தாக்குதலுக்கு இலக்காகி இருந்தார்.

 இவருடைய மரணச் செய்தி கேட்டு காரைதீவு மிகவும் ஒட்டுமொத்தமான கலங்கத்திலே இருந்தது இருந்தாலும் எமது காரைதீவு மண்ணின் மகத்தான வீர திறமையை காட்டியவர்.

 அதே போன்று வருத்தமாக நோய்வாய்ப்பட்டு மரணிக்கின்றவர்களுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவது கடமைகளை செய்வது வழமை ஆனால் நாட்டுக்காகவும் தேசத்துக்காகவும் மரணிப்பவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது எங்களுடைய கடமையாகும்.

அந்த தார்மீக கடமையை தர்மிகன் அவர்களுடைய நண்பர்கள் மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றார்கள்.

 எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறு ஒற்றுமையோடு மிகவும் பிரமாண்டமான முறையிலே நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு ஒற்றுமையோடு நாங்கள் அனைவரும் பயணிக்க வேண்டும் ஒற்றுமை தான் நமது ஊருக்கும் உரிய வெற்றியாகும் உண்மையில் அனைத்து ஊர் விடயங்களிலும் எங்களுடைய இளைஞர்கள் செயற்பட்டு முதல் வெற்றிகரமான விடயங்களை செய்தாலும் ஒழுக்க விழுமியங்களிலே இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.அந்த ஒழுக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

 எமது இருப்பையும் எமது எதிர்காலத்தையும் தக்கவைத்து வாழ வேண்டிய நிலைபாட்டில் நாங்கள் இருக்கின்றோம் மூன்று வருடங்களுக்கான ஞாபகார்த்தமாக நடாத்திய நிகழ்வுகளின், கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளின் புகைப்படங்களை காண்பித்திருந்தீர்கள் மகிழ்ச்சியாக இருந்தது இங்கு பார்க்கின்ற புகைப்படத்தில் பல இளைஞர்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள் உண்மையில் இங்கே பல வாய்ப்புகள் இருந்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு இளைஞர்கள் வெளிநாடு சென்று இருக்கின்றார்கள் உண்மையிலேயே தர்மிகனோட சிந்தனையும் தர்மிகனுடைய பேராலும் இன்று பிரமாண்டமான முறையிலே இந்த விளையாட்டு போட்டியை நீங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றீர்கள்.

 தர்மிகனின் தந்தையார் தர்மிகளுடைய நண்பர்களுடைய நற்செயல்பாடும் தன் மகனுடைய இழப்பையும் தன் மகன் இன்றைய நாளில் இந்த மண்ணுக்கும் நாட்டுக்கும் துணிச்சல் பாட்டை சிந்தித்தவாறு கலந்து கொண்டிருக்கின்றார் எமது மண் பல வீர வரலாறை படைத்தவன் அதேபோன்று இங்கு இருக்கக்கூடிய தருமிகளின் நண்பர்களும் ஒவ்வொரு துறையிலும் ஒழுக்க விழுமியங்களோடு எதிர்காலத்திற்காக பயணிக்க வேண்டும் தனக்கென வாழாமல் தன் இனத்துக்காக வாழ வேண்டும் அதுவே உங்களை வாழ வைக்கும்

VIDEOS

Recommended