மீலாது நபி விசேஷட நிகழ்வும் இமாமை கௌரவிக்கும் வைபவமும்

ஏ. எஸ். எம். ஜாவித்

UPDATED: Sep 18, 2024, 2:04:47 AM

மீலாது நபி விசேஷட நிகழ்வும் இமாமை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று மட்டக்குளி கதிரான வத்தை எக்கமுத்துபுரவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் இலாஹியாவில் ஏற்பாடு செய்யப்படடிருந்தது.

பள்ளிவாசலின் தலைவர் சியாட் அப்பாஸ் தலைமையில் நேற்று (16) திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது மஸ்ஜிதுல் இலாஹியாவில் கடந்த முப்பது வருடங்களாக பள்ளிவாசல் நிருவாகத்தோடும் அப்பகுதி மக்களோடும் அன்னபாக பழகி சிறப்பாக சேவையாற்றிக் கொண்டிருக்கும் பள்ளியின் பிரதம இமாம் மௌலவி றஸாக் மொஹமட் பாயிஸ் அவர்களை பள்ளிவாசல் நிருவாகமும் அப்பகுதி ஜமாத்தார்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

நினவுச் சின்னத்தை பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் அக்பர் அலியும் தற்போதைய தலைவர் சியாட் அப்பாசும் வழங்கி கௌரவித்தனர்.

அத்துடன் அப்பகுதி ஜனாஸா சங்கத்தினாலும் மௌலவியை பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

original/img-20240901-wa0070
இந்நிகழ்வில் மீலாது தின விசேட உரையை வடகொழும்பு அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை தலைவர் அஸ்செய்க் மெளலவி பௌமி சதாத் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சார்பாக கலந்து கொண்ட வக்பு பிரிவின் பொறுப்பாளர் ஏ.எஸ்.எம்.ஜாவித் ஆகியோர் வழங்கினர். இலாஹியா பள்ளியின் குர்ஆன் மத்ரஸா மாணர்களின் ஹஸீதா நிகழ்வும் இடம்பெற்றன.

ஒரு பள்ளிவாசலில் நீண்டகாலமாக ஒரு இமாம் கடமையாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமாகும் அவ்வாறான ஒரு நிலையில் மட்டக்குளி எக்கமுத்துபுறம் எனும் அதகிமான வறிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் அமைந்துள்ள இலாஹியா பள்ளிவாசலில் தொழுகை விடயங்களையும், மாணவர்களுக்கு பகுதி நேரமாக குர்ஆன் பாடங்களையும் கற்றுக் கொடுத்து வரும் மௌலவி வெளி ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் அர்ப்பணிப்போடு தனது கடமையை எவருக்கும் பங்கம் ஏறடாதவாறு நிறைவேற்றி வருவதால் அப்பகுதி மக்களால் அவர் மரியாதைக்குரியவாக மதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தலை நகரில் கூட பல வசதியான பள்ளிவாசல்கள் இருக்கின்ற நிலையில் மிகவும் வசதி குறைந்த பள்ளியா உருவாகி சிறுகச் சிறுக புனரமைக்கப்பட்டு இரண்டு மாடிகளைக் கொண்டதாக அந்தப்பகுதி ஏழை மக்களின் ஒத்துழைப்புடன் இன்று இயங்கி வருகின்றது.

குறிப்பாக இந்த பள்ளிவாசலில் இலாஹியா இளைஞர்கள் என்ற ஒரு அமைப்பையும் நிருவாகத்தினர் ஏற்படுத்தி அப்பகுதி இளைஞர்களை நல்விழிப்படுத்தவும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளை மெருகூட்டவும் வழி சமைக்கப்பட்டு வருகின்றமை மற்றும் நோயாளிகளுக்கு உதவி செய்தல் போன்ற பல விடயங்களில் செயற்பட்டு வருகின்றமை இங்கு மகிழ்ச்சிக்குரிய விடயமாக காணப்படுகின்றது.

உண்மையில் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றி பள்ளிவாசல்களில் கடமையாற்றும் உலமாக்கள், மௌலவிமார்கள் இனம் காணப்பட்டு அவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு அவர்கள் கௌரவிக்கபடுமானால் அது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சிறப்பான விடயமாகவும் வரவேற்கத்தக்க விடயமாகவும் அமையும் எனலாம்.

 

VIDEOS

Recommended