கூடலூர் அருகே 200 ஆண்டுகள் பழமையான மட்டப்பாறை பெருமாள் கோவிலில் 2 கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து வந்து தரிசனம்.
இரா.இராஜா
UPDATED: Oct 12, 2024, 1:17:43 PM
தேனி மாவட்டம்
கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டி மட்டப்பாறை பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
இந்த மட்டப்பாறை பெருமாள் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகப் பகுதிக்குள் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். மேலும் இந்த கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்.
மட்டப்பாறை பெருமாள் கோவில்
இந்த கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மலை பாதையில் உயரத்தில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வருகின்றனர்.
புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை அன்று ஆண்டுதோறும் இந்த கோயிலில் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆன்மீகம்
தொடர்ச்சியாக இந்த ஆண்டும் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி தர சாமி தரிசனம் செய்துவிட்டு வருகின்றனர்.
கோவிலுக்கு பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோருக்கு கோயில் விழா கமிட்டி சார்பாகவும், ஊர் நாட்டாமையின் சார்பாகவும் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது.