• முகப்பு
  • ஆன்மீகம்
  • மயிலாடுதுறை மேலமங்கை நல்லூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மேலமங்கை நல்லூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத தீமிதி திருவிழா

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 20, 2024, 7:10:25 AM

மயிலாடுதுறை மேலமங்கை நல்லூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத வைபவம் தீமிதி திருவிழா ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

original/img-20240820-wa0073
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மேலமங்கை நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது.

 இவ்வாலயத்தின் மகாபாரத வைபவம் தீமிதி திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் துரோபதி அம்மன், கர்ணன் பிறப்பு, தர்மர் பிறப்பு, மாடுபிடி சண்டை, அரவான் களபலி, கீதை உபதேசம், உள்ளிட்ட நாடகங்கள் திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.original/500x300_623706-1000850509
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. 

ALSO READ | போலி ஆவணம் மூலம் ஏரியில் மண் எடுக்கும் அவல நிலை.

இதனை முன்னிட்டு பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்டு வீரசோழன் ஆற்றில் இருந்து சக்தி கரகத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க காலி ஆட்டங்களுடன் ஆலயம் வந்தடைந்தனர். 

அங்கு கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த தீமிதி திருவிழாவில் தமிழ்நாடு சிவசேனா அமைப்பின் மாநில செயற்தலைவர் எஸ். சசிகுமார் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended