அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை இளைஞர் எழுச்சி மாநாடு - ஒரு பார்வை

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 23, 2024, 7:55:04 PM

இளைஞர்களே வாருங்கள் 

இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்குவோம்...!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவாட்ட இளைஞர் எழுச்சி மாநாடு கிழக்கு அரசியலில் ஒரு புது அரசியல் அத்தியாயத்துக்கான அடித்தளமாகும்.

original/20240824_011252
தற்போதைய ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு முன்னரும், வேட்பாளர் அறிவிப்பின் பின்னரும் சமூகம் சார்ந்து தீர்மானம் எடுக்கும் துணிவும், திறனும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு உண்டு என்பதை நிரூபித்து கட்டியுள்ள அரசியல் இயக்கம் என்பது யதார்த்தமாகும்.

இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லிம் கட்சிகளின் வரலாற்றை நோக்குகையில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் தலைமைக்கு பின்னர் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காகவும்,பெரும் பான்மை கட்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை சில அமைச்சு பதவிக்களுக்காக வழங்கி வந்ததினால் முஸ்லிம்களின் வாக்குகளின் பெறுமானம் பெறுமதியற்றதாகி போனதையும் நாம் கண்கூடாக கண்டே வந்துள்ளோம்.

இவ்வாறான முஸ்லிம் சமூகத்தின் அரசியல் முகவரியின் சரிவை கண்ட எமது கட்சியின் தலைவர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் தூர நோக்கு கொண்ட பார்வை தான் சமகால அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வகிப்பகமாகும் என்பதை சகலரும் புரிந்து கொள்ள முடியும் என்பது எனது பதிவாகும்.

மன்னாரில் பிறந்து  பலவந்த வெளியேற்றத்தை சந்தித்து தானும், தமது வடபுல சமூகமும் அகதிகள் என்ற பெயருடன் அனுபவித்த துன்பியல் வாழ்வுக்கு மத்தியிலும் மனம் தளராது எடுத்த முயற்ச்சி பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

கட்சியின் குறுகிய கால வளர்ச்சியும், தலைமைத்துவத்தின் சானக்கியமான அரசியல் காய் நகர்த்தலுமே இன்றைய இந்த அம்பாறை இளைஞர் எழுச்சி மாநாட்டுக்கான தேவைப்பாடாகும்.

குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியில் எமது கிழக்கு மாகாணம் பாரிய பங்களிப்பை செய்துள்ளது.

எம்மை விட்டு பிரிந்த மர்ஹூம் வை. எல். எஸ். ஹமீத் ஒரு முன்னுதார மனிதராக கூறவேண்டும். அது போல் மர்ஹூம் ஏ. ஆர். எம். ஜிப்ரி அவர்களின் பங்களிப்பும் கட்சியின் பிற்கால வளர்ச்சிக்கு தளத்தை கொடுத்தது என்பதை நினைவு படுத்துவது பொறுத்தமாகும்.

இந்த நிலையில் பல்வேறு துரோகங்களும், கழுத்தருப்புகளும் , போலி பதவிகளும் கொலோச்சம் ஏறி நிற்க்கும் சந்தர்ப்பத்தில் அம்பாறை மாவாட்ட இளைஞ்சர்கள் அற்ப சொற்ப எதிர்ப்பார்ப்புகளுக்கு சோரம் போனவர்கள் அல்லர் என்பதை முழு நாட்டுக்கும் எடுத்துரைக்கும் இளைஞ்சர் எழுச்சி மாநாட்டினை நடத்துகின்றனர்.

ஒதுங்கி நின்று பார்க்கும் நேரமல்ல இந்த தருணம் என்பதினால் இளைஞர்களே அணி திரளுங்கள் நாளைய சமூகத்திற்க்கு நாட்டை ஒப்படைக்க.....

 

றிசாட் பாருக் 

கல்முனை தொகுதி 

இளைஞர் அமைப்பாளர் 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

 

VIDEOS

Recommended