• முகப்பு
  • புதுச்சேரி
  • 30 முறை மனு கொடுத்து விட்டோம் 500 முறை அலுவலகம் நடந்து விட்டோம் ஒரு பயனும் இல்லை வாழ வழி இல்லாத எங்களுக்கு ஆதார் கார்டு,ரேஷன் கார்டு,வாக்காளர் அட்டை எதற்கு....?

30 முறை மனு கொடுத்து விட்டோம் 500 முறை அலுவலகம் நடந்து விட்டோம் ஒரு பயனும் இல்லை வாழ வழி இல்லாத எங்களுக்கு ஆதார் கார்டு,ரேஷன் கார்டு,வாக்காளர் அட்டை எதற்கு....?

சக்திவேல்

UPDATED: Sep 16, 2024, 11:25:09 AM

புதுச்சேரி 

ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் மக்கள்குறை கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி இந்த மாதத்திற்கான மக்கள் குறை கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கண் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்பொழுது அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகர் செட்டிகுளம் பகுதி சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை அடங்கிய பதாகைகளை கழுத்தில் மாலையாக மாட்டிக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

Latest Puducherry News in Tamil

மனுவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 52 குடும்பத்தினர் அப்பகுதியில் குடியிருந்து வருவதாகவும், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் தங்களை காலி செய்ய சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டி மனு அளித்தனர். 

மேலும் இது சம்பந்தமாக 500 முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து,30 முறை மனு அளித்தும் பயனில்லை, எனவே தங்களுக்கு வாழ வழி இல்லாததால் கைலாஷா தீவுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்து, தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Breaking News In Tamil 

மேலும் அவர்களின் கோரிக்கை கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும், அதனை அவர்கள் ஏற்காமல் குறைப்பு கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்,..

அபோது 50 ஆண்டு காலமாக குடியிருந்து வருகிறோம். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதல் பெயரில் அதிகாரிகளும் பொதுப்பணி துறையும் தங்களை காலி செய்ய சொல்கிறார்கள்.

கைலாசா தீவு

சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் தங்களை தினம் மிரட்டுவதாகவும் தங்களை உயிருக்கு பாதுகாப்பு இல்லை, வாழ வழி இல்லாத தங்களை கைலாசா தீவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியதோடு சங்கு ஊதி தங்களது எதிர்ப்பையும் தெரிவித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended