டாஸ்மாக். பல்வேறு வரி உயர்வுகளால் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருமானம் எங்கே செல்கிறது அண்ணாமலை கேள்வி.
கார்மேகம்
UPDATED: Apr 15, 2024, 5:39:11 AM
டாஸ்மாக் மற்றும் பல்வேறு வரி உயர்வுகளால் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருமானம் எங்கே செல்கிறது என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்
மத்திய பா.ஜனதா அரசு 10 ஆண்டுகளில் 10.76 லட்சம் கோடி நிதி வழங்கியிருப்பதாக கூறுவது அப்பட்டமான பொய் கணக்கு என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று விமர்சித்திருந்தார் இதற்கு பதில் அளித்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நேற்றைய பதிவில் கூறியிருப்பதாவது :
மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 17 லட்சம் கோடி தான் நிதி வழங்கி உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார் ஆனால் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5.5 லட்சம் கோடி மத்திய அரசு நிதி கொடுத்துள்ளது என்று கூறுகிறார் முதலில் குடும்பத்துக்குள் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்
தமிழகத்தின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக நெடுஞ்சாலைகள் ரெயில் நிலையங்கள் துறைமுகங்கள் விமான நிலையங்கள் இவற்றை எல்லாம் மேம்படுத்த செலவிடப்பட்ட நிதி மற்றும் தமிழகத்தில் செயல்படும் திட்டங்களுக்கான மானியம் ஆகியவையை எந்த கணக்கில் வைப்பீர்கள் தி.மு.க.ஸ்டிக்கர் ஒட்ட முடியாத காரணத்தால் இவை மத்திய அரசு வழங்கிய நிதி இல்லை என்று ஆகிவிடுமா ?
தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் பல்வேறு வரி உயர்வுகளால் வருமானம் இருக்கும் மாநிலம் முழுவதும் அரசுப் பணியாளர்கள் ஆசிரியர்கள் போக்குவரத்து துறை ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்துவது ஏன்?
மாநில அரசுக்கு கிடைக்கும் வருமானம் எங்கே செல்கிறது பிரதமர் மோடி உறுதியளித்த 10 லட்சம் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் கடந்த 18 மாதங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது என்பது முதல் அமைச்சருக்கு தெரியவில்லை
2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. வாக்குறுதியளித்த 3/1/2 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் என்ன ஆனது என்பதை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு சொல்ல தாயாரா ?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.