மத்திய அமைச்சரவையின் சுவாரிஸ்யம்.

Bala

UPDATED: Jun 10, 2024, 2:09:39 PM

கேரளாவிற்கு இரண்டு இடம் கொடுத்துள்ளார்கள். நடிகர் சுரேஷ் கோபி மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஜார்ஜ் குரியனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. ஜார்ஜ் குரியன் கிறிஸ்துவ மக்களின் பிரதிநிதியாக இருப்பார் மற்றும் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு ஆக இருக்கிறார். அவருக்கு மிகுந்த அரசியல் அனுபவம் உள்ளது.

தமிழகத்திலிருந்து பாஜக சார்பாக யாரும் வெற்றி பெறவில்லை என்றாலும், நிர்மலா சீத்தாராமன், ஜெயசங்கர் மற்றும் எல் முருகனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் போதிய அளவு வெற்றி பெறாத நிலையில், அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று முறை வாரணாசி மிர்ஷாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற அப்னா தளம் கட்சியின் ஒரே எம்.பி. ஆன அனுப்பிரியா பட்டேலுக்கும் இம்முறையும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ராஜாங்கத் துறை மந்திரியாக இருந்தார்.

புதிய நாடாளுமன்ற அமைச்சரவையில் ஏழு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். நிர்மலா சீதாராமன் மற்றும் அன்னபூர்ணா தேவி கேபினட் அந்தஸ்து பெற்றுள்ளனர். அனுப்பிரியா பட்டேல், ஷோபா கரந்தலாஜே, ரச்சா நிகில் கட்சே, சாவித்திரி தாகுர், நிமுபென் பாமினியா ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

இந்த மத்திய அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் 18 பேர் இடம் பெற்றுள்ளதுடன், புதிய முகங்கள் 33 பேர் இடம் பிடித்துள்ளனர், இது புதிய இளம் தலைமுறைக்கான தேர்வாகும்.

அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஐந்து பேர் தனிப்பொறுப்புள்ள அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுள்ளனர்.

இதன்படி, உத்தரப்பிரதேசத்தில் இருந்து 10 பேர், பீகாரில் இருந்து எட்டு பேர், மகாராஷ்டிராவில் இருந்து 6 பேர், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலிருந்து தலா ஐந்து பேர் அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர்.

மேலும், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் இரண்டிலிருந்து தலா நான்கு பேர், ஒடிசா, ஹரியானா மற்றும் ஆந்திராவில் இருந்து தலா மூன்று பேர், தெலுங்கானா, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், இமாச்சல் மற்றும் அருணாச்சல் ஆகிய மாநிலங்களில் இருந்து மத்திய நாடாளுமன்ற அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய தேசிய முழுமைக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கவனமான அமைச்சரவைத் தேர்வு நடந்துள்ளது! கூட்டணி கட்சிகளுக்கும் இன்னும் சிலருக்கும் பங்களிக்கப்பட்டு இருப்பது சிறந்த சமத்துவ நோக்கமாகும். புதிய நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

 

VIDEOS

Recommended