• முகப்பு
  • அரசியல்
  • இந்த தேசத்தின் கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி -சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிப்பு

இந்த தேசத்தின் கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி -சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிப்பு

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Sep 23, 2024, 4:50:01 PM

தேசத்தின் கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை, இலங்கை மக்கள் தெரிவு செய்துள்ளனர்" என்று, தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, 

இந்த ஜனாதிபதி பதவிக்குப் பின்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நாடு காணாது என உறுதியளித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த சுனில் ஹந்துன் நெத்தி - 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் ஜனாதிபதி ஒருவரே, தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நோக்கத்திற்காக பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படும். அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். 

இது ஆரம்பம்தான். பிரஜைகளின் அங்கீகாரத்துடனும் உதவியுடனும் இந்தத் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்” என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

VIDEOS

Recommended