• முகப்பு
  • அரசியல்
  • அநுர இன்று முழு நாட்டிலும் வன்முறையை ஏற்படுத்தியுள்ளார் அவர்களால் ஒரு பல்கலைக்கழகமும் இன்று மூடப்பட்டுள்ளது.

அநுர இன்று முழு நாட்டிலும் வன்முறையை ஏற்படுத்தியுள்ளார் அவர்களால் ஒரு பல்கலைக்கழகமும் இன்று மூடப்பட்டுள்ளது.

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Sep 14, 2024, 9:18:55 AM

இந்த நாட்களில் வன்முறையை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அநுர குமார திசாநாயக்கவும் மேலும் சிலரும் கூறிக்கொண்டு திரிகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை.

original/img-20240912-wa0167
இன்று மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைகள் மற்றும் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது.

 மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான பல வெகுஜன அமைப்புகளின் கூட்டத்திற்கு இடை நடுவில் புகுந்த மக்கள் விடுதலை முன்னணியினர் தடிகள் பொல்லுகளால் தாக்கியிருக்கின்றார்கள்.

 புள்ளடிக்கு பகரமாக குண்டுகளையும் துப்பாக்கி ரவைகளையும் பயன்படுத்தி, துப்பாக்கி முனையில் வன்முறையை ஏற்படுத்தி, பேப்பர் துண்டு ஒன்றின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கின்ற யுகத்திற்கு அநுரகுமார நாட்டை கொண்டு செல்ல முயற்சிக்கின்றார். ரணிலும் அநுரவும் சேர்ந்து மேற்கொள்கின்ற பொறிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

original/img-20240902-wa0045
2024 ஆம் ஆடு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 51 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 13 ஆம் திகதி ஹபராதுவ நகரில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 தற்போதைய ஜனாதிபதி தேர்தல் போட்டி களத்தில் இருக்கின்றார். ஒரு வேட்பாளர் அவரே தோல்வி அடைவார் என்று கூறுவது இதுவரையும் கேட்காத ஒரு விடயமாகும். இது ஒரு புதுமையாக இருக்கின்றது. ரணில் விக்ரமசிங்க நாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக அன்றி அநுரகுமார திசாநாயக்கவை கையில் தாங்கிக் கொள்வதற்காகவே செயற்பட்டு வருகிறார். அவர் அநுரவின் சப்போர்ட்டராக இருக்கின்றார்.

original/img-20240901-wa0081
கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின் போதும் ரணில் விக்கிரமசிங்க தன்னை தோல்வியடைய செய்ய முயற்சி செய்தார். இந்த முறை தேர்தலின் போதும் தன்னை தோல்வியடைய செய்யவே முயற்சி செய்கின்றார். ரணில் அநுர என்போர் இருதரப்பினர் அல்ல. இவர்கள் ஒரே அரசியல் கும்பல். இந்தக் கும்பலுக்கான தேவை நாட்டைக்கட்டி எழுப்புவது அல்ல, 220 இலட்சம் மக்களின் மீதும் வரிச் சுமையை அதிகரிப்பதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

வரியை குறைப்போம் என்று கூறுகின்ற ரணிலினால் 10 இலட்சம் பேர் இருளில்.

 வரியை குறைப்போம் என்று கூறி சலுகை வழங்குகின்ற ஜனாதிபதி இன்று 10 இலட்சம் பேரின் மின்சாரத்தை துண்டித்து இருக்கின்றார். இலட்சக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் மூடப்பட்டு இளம் தலைமுறையினரின் தொழில் வாய்ப்பு இல்லாது போயிருக்கின்றது. இதற்குப் பிரதான காரணம் பொருளாதாரம் சுருக்கப்பட்டமையாகும். பொருளாதாரத்தை விரிவாக்குவது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை திட்டத்தில் உள்ள விடயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

 

வங்குரோத்தடைந்த எமது நாட்டுக்கு கொலை கலாச்சாரம் வேண்டாம்.

 ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சுகாதாரத் துறைக்கும் கல்வித்துறைக்கும் பாரியளவு சேவைகளை ஆற்றி அதனை நிரூபித்திருக்கிறது. அதனால் அதிகாரத்திற்கு வந்த பின்னர் எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். 76 வருட இந்த வரலாற்று காலத்துக்குள் நாட்டுக்காக சேவை செய்த ஒரே எதிர்க்கட்சித் தலைவர் தானும் ஐக்கிய மக்கள் சத்தியமாகும்.

எனவே இந்த நாட்டுக்கு கொலை கலாச்சாரமும் அச்சுறுத்தலும் தீவிரவாதமும் தேவையில்லை. ஒழுக்க விழுமியத்துடன் கூடிய ஒரு சமூகமே இந்த நாட்டுக்கு தேவை. அனைவருக்கும் சுபீட்சம் கிடைக்கின்ற நாடொன்று வேண்டும். அந்த நாட்டுக்கான அடித்தளம் இடப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டி காட்டினார்.

 நாடு வங்கரோத்தடைந்து முழு நாட்டு மக்களும் அழுத்தங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகியிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் குறுகிய காலத்துக்குள் எமது நாட்டை கட்டியெழுப்புவோம் என உறுதியளிக்கின்றோம். 220 இலட்சம் மக்களையும் மகிழ்ச்சியடையச்செய்கின்ற வாழ்க்கை முறை ஒன்றை உருவாக்குவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

 

 

VIDEOS

Recommended