• முகப்பு
  • அரசியல்
  • ரணிலிடம் உள்ள 80 மொட்டு எம்.பி.க்கள் நாட்டை விட்டும் வெளியேற முயற்சி - புதிய தகவல்

ரணிலிடம் உள்ள 80 மொட்டு எம்.பி.க்கள் நாட்டை விட்டும் வெளியேற முயற்சி - புதிய தகவல்

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Sep 10, 2024, 1:14:24 AM

ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியை அறிந்து கொண்ட மொட்டுக் கட்சிக் காரர்களில் சுமார் 80 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதான அமைச்சர்கள் பலர் நாட்டை விட்டும் வெளியேறுவதற்கு ஆயத்தமாகி இருப்பதாக, நம்பத்தகுந்த செய்தி கசிந்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

  இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

 அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,

 ரணில் விக்கிரம சிங்கவின் தோல்வியை அறிந்து கொண்ட மொட்டுக்கட்சிக் காரர்கள் பலர், அவரை விட்டும் மெல்ல மெல்ல விலகிச் செல்கின்றனர்.

original/img-20240909-wa0158
(Sponsord )

இவர்களில் 80 பேர் 21 ஆம் திகதி தேர்தலில் வாக்களித்து விட்டு, நாட்டை விட்டும் வெளியேறுவதற்கு வீஸா மற்றும் விமான டிக்கட் பெற்றுள்ளனர். இவ்விடயத்தை நான் உறுதியாகவும் ஊர்ஜிதமாகவும் கூறுகிறேன்.

 ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கும் மொட்டுக் கட்சிக் காரர்கள் தற்போது கடும் மன உளைச்சலில் உள்ளனராம். இவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை மடியில் வைத்துக் கொண்டு தேர்தலில் வெல்ல முடியும் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க இன்னும் தோல்வியின் விளிம்பிலேயே இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட மொட்டுக் கட்சிக் காரர்கள் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார்கள். தற்போது நாட்டை விட்டும் வெளியேறவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். 

எமக்கு மொட்டும் இல்லை, ரணிலும் இல்லை' என்று தற்போது யோசிக்கிறார்கள். இரு தோணியில் கால் வைத்துக் கொண்டு தவிக்கிறார்கள்.

ரணிலை நம்பி மொட்டை விட்டும் வந்து ஏமாளிகளாக ஆகிவிட்டோமே' என தலையிலே கை வைத்துக் கொள்கின்றனர்.

உண்மையில் ரணிலிடம் யூஎன்பி காரர்கள் யாருமில்லை. மொட்டையே மொட்டையாக வைத்துக் கொண்டிருக்கிறார். அசல் ஒரிஜினல் யூஎன்பி காரர்கள் எங்களிடமே உள்ளனர். ஒரிஜினல் யூஎன்பி காரர்கள் சஜித் பிரேமதாஸ வின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலேயே இணைந்துள்ளனர்.

original/img-20240902-wa0045
இப்போது ரணிலிடம் உள்ள மொட்டுகளும் பாயத்தொடங்கியுள்ளன. இதுதான் உண்மை.

 சிறிகொத்தவில் தற்போது 'லிற்ரோ கேஸ்' தான் உள்ளது. சிறிகொத்த தற்போது 'லிற்ரோ ஏஜண்டாக' மாறியுள்ளது.

அங்கிருந்த யூஎன்பி யின் பலம், அதிகாரம் எல்லாம் சஜித்திடமே உள்ளன. 

எனவே, ரணிலிடம் 'லிற்ரோ கேஸ்' தான் உள்ளது. அதுவும் எந்த நேரத்தில் வெடிக்குமோ தெரியாது " என்றார்.

 

 

VIDEOS

Recommended