- முகப்பு
- மாவட்டச் செய்தி
- புடவை கொடுப்பதாக கூட்டத்திற்கு ஆள் சேர்த்த அதிமுக புடவை கொடுக்காததால் மேடையை பெண்கள் முற்றுகை.
புடவை கொடுப்பதாக கூட்டத்திற்கு ஆள் சேர்த்த அதிமுக புடவை கொடுக்காததால் மேடையை பெண்கள் முற்றுகை.
செ.சீனிவாசன்
UPDATED: Feb 28, 2024, 6:36:26 AM
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை ஒட்டி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Also Watch : மருத்துவமனையில் கஞ்சா போதை ஆசாமிகள் ரகளை.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும் ஓ எஸ் மாணியன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்
கூட்டத்திற்கு கட்சி தொண்டர்களை வேன் வைத்து அழைத்து வந்தனர் மேலும் கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு கூட்டம் முடிவில் புடவை வழங்கப்படும் என கூறி டோக்கன் கொடுத்து பெண்களை கூட்டத்திற்கு திரட்டி இருந்தனர்
கூட்டம் முடிந்ததும் வேனில் கொண்டு வந்து புடவை மூட்டைகளை இறக்கி மேடையில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் வழங்க ஆரம்பித்தார் கூட்டம் துவங்கி 5 மணி நேரம் காத்திருந்த பெண்கள் முந்தி அடித்துக்கொண்டு புடவைகளை வாங்க ஆரம்பித்தனர்.
இதனால் மேடையில் நெருக்கடி கூச்சல் ,குழப்பமும் ஏற்பட்டது ஒரு கட்டத்தில் கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் டோக்கன் இல்லாமலும் முண்டியடித்துக் கொண்டும் புடவைகளை வாங்க ஆரம்பித்தனர்
இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக தொண்டர்கள் புடவை வழங்கியதை நிறுத்திவிட்டனர் பின்பு புடவை கிடைக்காமல் இருந்த பெண்கள் மேடையிலே அமர்ந்து முற்றுகையிட்டனர்.
இதனை செய்தியாளர்கள் படம் எடுக்க அதிமுகவினர் அதனை தடுத்து தொலைக்காட்சி நிருபர்களை மிரட்டியும் செல்போனை பிடுங்கி தகாத வார்த்தையில் பேசி நிருபர்களை படம் எடுக்கக் கூடாது என மிரட்டினர்.
இந்த நிலையில் பெண்கள் புடவை வாங்குவதற்கு மேடையை முற்றுகையிட்டதால் புடவை வழங்குவதை நிறுத்திவிட்டு முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் மீதி இருந்த புடவை எடுத்துக்கொண்டு காரில் சென்று விட்டார்
Also Watch : 90களின் மாணவர் உலகத்தை கண் முன் நிறுத்திய இன்னொரு '96'”
இதனால் கூட்டத்தில் சலசலப்பு, பதட்டமும் ஏற்பட்டது புடவை கிடைக்கும் என கூட்டத்துக்கு வந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் புடவை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.