பூவிருந்தவல்லியில் பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் காதல் ஜோடி நீதிமன்றத்தில் ஆஜராகி குழந்தையை உரிமை கொண்டாடியுள்ளது.
S.முருகன் & சுந்தர்
UPDATED: Feb 27, 2024, 7:52:37 PM
பூவிருந்தவல்லி ராமானுஜர் கூட சாலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தனியார் விடுதியின் அருகே குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை ஒன்றை விடுதி உரிமையாளர் யுவராணி கண்டெடுத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பச்சிளம் குழந்தையை சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Also Watch : 90களின் மாணவர் உலகத்தை கண் முன் நிறுத்திய இன்னொரு '96'”
இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி குழந்தையின் தாயை தேடி வந்த நிலையில் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் காதல் ஜோடி ஒன்று தஞ்சமாகி குழந்தை தங்களுடையது எனவும் குழந்தையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
நாகப்பட்டினத்தை சேர்ந்த கண்ணகி/26 பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலை செய்து வந்ததாகவும் ஏற்கனவே சொந்த ஊரான நாகபட்டினத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும்
சென்னை வந்தும் அது தொடர்ந்து நிலையில் அதன் மூலமாக கர்பம் அடைந்து பின்னர் இதனை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
9 மாதமாக இருந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது அச்சத்தில் என்ன செய்வது என்பது தெரியாமல் கண்ணகி குழந்தையை வீசிவிட்டு சென்றுள்ளார்.
Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்
இதனிடையே தகவல் அறிந்து வந்த காவல்துறை காதல் ஜோடியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.