i 5 மாடல் கம்ப்யூட்டருக்கு 4.5 லட்சம் செலவு செய்வீர்களா கொந்தளித்த கவுன்சிலர்.

செந்தில் முருகன்

UPDATED: Mar 12, 2024, 6:31:33 PM

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி நகர மன்றத்தின் மாதாந்திர உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. 

நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 36 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வார்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

Also Read : தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்

பாதாளசாக்கடை நீர் வீதிகளில் வழிந்தோடும் நிலையில் லட்சக்கணக்கான ரூபாய் செலவீனமாக கணக்கு காட்டப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

Also Read : அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி கள நிலவரம்

குடிநீர் மற்றும் பாதாளசாக்கடை திட்ட பணிகள் மற்றும் இணைப்பு வழங்குதல் உட்பட்ட பல்வேறு பணிகளுக்காக 5 கணிணிகள், 2 பிரிண்டர்கள் வாங்க நகராட்சி வருவாய் நிதியில் 4.50 லட்சம் செலவீனமாக ஒப்புதல் கோரப்பட்டது.

Also Watch : இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளை செயல் இழக்க வைக்கும் அக்னி 5

இதற்கு திமுகவைச் சேர்ந்த 29வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ரஜினி எதிர்ப்பு தெரிவித்தார். என்ன மாடல் கம்ப்யூட்டர் வாங்குறீர்கள், நீஙகள் வாங்கவுள்ள ஐ5 மாடல் கமயூட்டர் 15 வருடத்திற்கு முன்பே வந்தது.

Also Read : கூட்டணி கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி - அதிருப்தியில் திமுகவினர்.

20 ரூபாயில் நான் ஐ5 மாடல் லேப்டாப் வாங்கி தருகிறேன் இதற்குப்போய் இவ்வளவு பெரிய தொகையா ஒதுக்குவது என்று நகராட்சி ஆணையர் சங்கரிடம் கேள்வி எழுப்பினார்.

Also Read : தருமபுரம் ஆதீன வீடியோ விவகாரத்தில் ஆதீன நிர்வாகத்தினரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை

ரோடு போட்டு பிச்சுகிட்டு போச்சு நகராட்சி நிதியை வீணடிப்பதாகவும் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIDEOS

RELATED NEWS

Recommended