• முகப்பு
  • குற்றம்
  • தருமபுரம் ஆதீன வீடியோ விவகாரத்தில் ஆதீன நிர்வாகத்தினரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை:-

தருமபுரம் ஆதீன வீடியோ விவகாரத்தில் ஆதீன நிர்வாகத்தினரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை:-

செந்தில் முருகன்

UPDATED: Mar 12, 2024, 7:18:32 AM

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குரு மகா சந்நிதானமாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

இவர்மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக பணம் கேட்டு, ஆதின நிர்வாகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோக்களை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவமானப்படுத்தப் போகிறோம் என்று தொடர்ந்து மிரட்டுவதும் தம்மை கழுத்தைப் பிடித்து கொல்ல முயற்சித்து வருகின்றனர்

Also Watch : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி

ஆதீனத்திற்கும் எங்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது, ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை ஆதீன கர்த்தரின் சகோதரர் விருத்தகிரி என்பவர் 7 நபர்கள் மீது புகார் அளித்தார்.

அந்த புகார் தொடர்பாக மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மற்றும் திருக்கடையூர் விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலின் பேரில் தஞ்சை வடக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், திருப்பனந்தாளை சேர்ந்த ஸ்ரீனிவாஸ், ஆதீனத்தின் மெய்க்காவலர் செந்தில், போட்டோகிராபர் பிரபாகரன், செம்பனார்கோவில் தனியார் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசு, செய்யாறு வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் ஆகிய 9 பேர் முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் என தெரியவந்தது,

Also Watch : இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளை செயல் இழக்க வைக்கும் அக்னி 5

அவர்களில் வினோத், ஸ்ரீநிவாஸ், விக்கி, குடியரசு ஆகியோரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பாஜக மாவட்ட செயலாளர் அகோரம் உள்ளிட்ட ஐந்து பேர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.

இதனிடையே, ஆதீனத்தின் மெய்க்காவலர் செந்தில், திருக்கடையூர் விஜயகுமார் ஆகிய இருவரும் ஆதீனத்திற்கு ஆதரவாக இருந்தனர் என்றும் அவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று ஆதீனத்தின் சார்பில் புகார் கொடுத்த அவரது தம்பி விருத்தகிரியே மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குக் தனித்தனியே கடிதம் அனுப்பியிருந்தார்.  

Also Read : குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.

இதற்கிடையே தற்பொழுது சிறையில் உள்ளவர்கள் மேலும் சில தகவல்களை மறைத்துள்ளதாகவும் அவர்களிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டால் மேலும் உண்மை வெளிவர வாய்ப்புள்ளது எனக்கருதிய மயிலாடுதுறை போலீசார் அந்த நான்கு நபர்களையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து வீசாரிக்க முடிவுசெய்து 11ஆம் தேதி மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நடுவர்நீதிமன்றம் எண்.1ல் மயிலாடுதுறை போலீசார் மனு செய்தனர்.

Also Read : தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்

வேண்டுகோளை பரிசீலித்த நீதிபதி கலைவாணி, மயிலாடுதுறை போலீசார் கேட்கும் 5 நாள் அளிக்க முடியாது என்றும் 2 தினங்கள் மட்டுமே விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார், 13-ஆம் தேதி மாலை 4 நபர்களையும் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது.  

Also Read : மார்ச் 8-ம் தேதி பெண்களை பெருமைப்படுத்தி கொண்டாடுவதாகச் சொல்கிறது உலகம். ஆனால் யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறதா?

மயிலாடுதுறை போலீசார் சிறையிலிருந்து வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் மற்றும் குடியரசு ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  மயிலாடுதுறை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read : ஜாபர் சாதிக்கிற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கலாம் : NCB அறிக்கை

VIDEOS

RELATED NEWS

Recommended