• முகப்பு
  • சென்னை
  • கோயம்பேட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு.

கோயம்பேட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு.

S.முருகன்

UPDATED: Feb 26, 2024, 7:51:50 PM

நெற்குன்றத்தில் அருள்மிகு மாரி நாராயணி அம்மன் திருக்கோவில் உள்ளது.

Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?

இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலுக்கு சொந்தமான 950 சதுர அடி நிலத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி இருந்து வந்தனர்.

Also Read : எடப்பாடி மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அதை செய்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் - ராஜேந்திர பாலாஜி

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க உத்தரவிட்டதின் பேரில் சென்னை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி கமிசனர் நித்யா தலைமையில்  வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மூன்று கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்

மேலும் இந்த பகுதி கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

Also Read : ராமாபுரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன்கள்.

தற்போது இந்த இடத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கான இடமாக மாற்றப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Also Read : கோயம்பேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்.

தற்போது மீட்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended