• முகப்பு
  • சென்னை
  • சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவனுக்கு வழக்கம் போல் கைக்கு கட்டு போடப்பட்டது.

சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவனுக்கு வழக்கம் போல் கைக்கு கட்டு போடப்பட்டது.

S.முருகன்

UPDATED: Feb 26, 2024, 7:41:30 PM

மதுரவாயல், கோயம்பேடு, விருகம்பாக்கம், அரும்பாக்கம் நொளம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் தனியாக செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

Also Read : கோயம்பேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

மேலும் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது பிரபல வழிப்பறி கொள்ளையன் ரகுமான் என்பது தெரிய வந்தது.

Also Read : ராமாபுரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன்கள்.

இதையடுத்து திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த ரகுமானை மதுரவாயல் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது குறிப்பாக தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வேலை முடித்துவிட்டு தனியாக செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்வது மற்றும்

Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?

அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனங்களை பறித்து செல்வது வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடுவது உள்ளிட்ட பல்வேறு சம்பவத்தில் ஈடுபட்டதும் 

அவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள் குறைந்த விலைக்கு போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக கிராமப்புற பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

Also Read : எடப்பாடி மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அதை செய்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் - ராஜேந்திர பாலாஜி

மேலும் தன்னுடன் கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டால் போலீசிடம் சிக்கிக் கொள்வோம் என்பதற்காக கூட்டாளிகளை சேர்த்துக் கொள்ளாமல் தனியாக வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இவன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்கள் உள்ள நிலையில் வழிப்பறியில் கிடைத்த பணத்தை வைத்து உல்லாசமாக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் நிலையில் அங்கு கையில் உள்ள பணம் தீர்ந்து விட்டால் அந்தப் பகுதிகளிலும் வழிப்பறியில் ஈடுபட்டு உல்லாச வாழ்க்கையில் இருந்தது தெரிய வந்தது.

Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்

மேலும் இவன் மீது பெங்களூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து இவனிடம் இருந்து ஆறு மோட்டார் சைக்கிள்கள் ஐந்து செல்போன்கள் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended