தமிழகத்தின் கொங்கு மண்டலம் இந்தியாவின் பல்வேறு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது- நரேந்திர மோடி
TGI
UPDATED: Feb 27, 2024, 9:19:15 PM
என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை
ஜவுளித் தொழில் துடிப்பான தொழிலாக உள்ளது
Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்
காற்றாலை மின்சார உற்பத்தியிலும் முன்னணி வகிக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் இதயங்களில் இடம் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க சில கொள்ளையர்கள் தடுக்கின்றனர்.
சிலர் தங்களின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.
Also Watch : 90களின் மாணவர் உலகத்தை கண் முன் நிறுத்திய இன்னொரு '96'”
நண்பர்களே தமிழ் மொழி, பண்பாடு மிகவும் நெருக்கமானது மட்டுமல்ல; சிறப்பு வாய்ந்தது.
ஐக்கிய நாடுகள் சபையில் நான் படித்த தமிழ் கவிதைகளை படித்தேன்.
காசி தமிழ் சங்கம், செங்கோல் வழியாக தமிழுக்கு மரியாதை செலுத்தி இருக்கிறேன்.
தமிழகத்துக்கும், எனக்கும் அரசியல் ரீதியான உறவு மட்டும் இல்லை; இதயத்தோடு தொடர்புடைய உறவு.
ஏனென்றால் நான் பல ஆண்டுகளாக தமிழ் மண்ணோடு பின்னி பிணைந்து இருக்கிறேன்.
1991ல் நான் ஏக்தா யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்க தொடங்கினேன்.
கன்னியாகுமரி மண்ணை நெற்றியில் பூசி என்னுடைய யாத்திரையை தொடங்கினேன்.
இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்ஜிஆரை நினைத்துப் பார்க்கிறேன்.
ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை செய்தவர் எம்ஜிஆர்.
என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.