- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மயிலாடுதுறையில் வலிப்பு நோய் வந்த 9 மாத குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்காததால் மறியலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தையை சட்டையை பிடித்து போலீசார் இழுத்துச் சென்றதால் பரபரப்பு.
மயிலாடுதுறையில் வலிப்பு நோய் வந்த 9 மாத குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்காததால் மறியலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தையை சட்டையை பிடித்து போலீசார் இழுத்துச் சென்றதால் பரபரப்பு.
செந்தில் முருகன்
UPDATED: Feb 28, 2024, 1:02:06 PM
மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் கிருஷ்ணவேணி தம்பதியின் 9 மாத கைக்குழந்தைக்கு இன்று காலை வலிப்பு நோய் ஏற்பட்டது.
Also Watch : மருத்துவமனையில் கஞ்சா போதை ஆசாமிகள் ரகளை.
இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை தூக்கி வந்தனர்.
காலை ஆறு மணி முதல் 10:30 மணி வரை நான்கு மணி நேரம் மருத்துவர்கள் யாரும் மருத்துவம் பார்க்க வரவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழிப்பதாகவும் அங்கே இருந்த மருத்துவ செவிலியர்கள் வெளியில் சென்று மருந்து வாங்கி வருமாறு ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரத்தினகுமார் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் அரசு மருத்துவமனை முன்பு ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் ரத்தினகுமார் மற்றும் உறவினர்களை சட்டையை பிடித்து மருத்துவமனை உள்ளே இழுத்து சென்றனர்.
இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிறிய தள்ளுமுள்ளு மற்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Also Read : புடவை கொடுப்பதாக கூட்டத்திற்கு ஆள் சேர்த்த அதிமுக புடவை கொடுக்காததால் மேடையை பெண்கள் முற்றுகை