தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவனை கைது செய்த போலிசார்
பதுளை - ராமு தனராஜா
UPDATED: Feb 19, 2024, 11:53:37 AM
தனது மனைவியைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெலிமடை டயரப பகுதியில் இன்று (19) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிராஹவத்தை, மேல் பிரிவு டயரபா தோட்ட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Also Read.தற்போதுள்ள பொருளாதார உயர்வுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்பட வேண்டும்
நேற்று மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்று இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது
உயிரிழந்த பெண்ணின் 35 வயதுடைய கணவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்