• முகப்பு
  • ஆன்மீகம்
  • கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தில் உள்ள பரிவார சகித அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், அருள்மிகு பத்திரகாளியம்மன், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்.

கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தில் உள்ள பரிவார சகித அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், அருள்மிகு பத்திரகாளியம்மன், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்.

ரமேஷ்

UPDATED: Feb 26, 2024, 9:55:47 AM

கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தில் உள்ள பரிவார சகித அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், அருள்மிகு பத்திரகாளியம்மன், ஆலயத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றதம், சூரியன், ஐராவதம்,சுதன்மன முதலியவர்களால் வழிபட்டதும் ஆன திரு இன்னம்பூர், ஆலயத்தில் அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், ஸ்ரீ பச்சை காளி, ஸ்ரீ பவளகாளி, ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

Also Read : எடப்பாடி மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அதை செய்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் - ராஜேந்திர பாலாஜி

இத்தகைய சிறப்பு பெற்ற ஆலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு பல மாதங்களாக நடைபெற்ற வந்த கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 24ம் தேதி சனிக்கிழமை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியவை நடைபெற்றது.

Also Read : நடுக்கடலில் திடீர்குப்பம்-கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே மோதல் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், ஒருவர் மருத்துவமனையில், அனுமதி

தொடர்ந்து இன்று 4ம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹதியும், தீபாராதனை நடைப்பெற்ற பிறகு, மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், சிவாச்சாரியார்கள் புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்த புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது,

Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்

இதில் நூற்றுக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மூலவர்களுக்கு மகா அபிஷேகமும், மாலை காளியம்மன், புறப்பாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.

Also Read : தமிழகம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் 8.33 லட்சம் கோடி கடனில் இருக்கிறோம் - சரத்குமார்

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமை சொக்கலிங்கம், மற்றும் ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?

VIDEOS

RELATED NEWS

Recommended