• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கும்பகோணத்தில் இரும்பு, கம்பி சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்.

கும்பகோணத்தில் இரும்பு, கம்பி சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்.

ரமேஷ்

UPDATED: Feb 27, 2024, 8:27:31 AM

கும்பகோணத்தில் அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் மற்றும் கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் சார்பில் இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் தலைவர் இளங்கோவன், தலைமையில் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

Also Read : எடப்பாடி மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அதை செய்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் - ராஜேந்திர பாலாஜி

இதில் செயலாளர் சரவணன், பொருளாளர் சிவகுரு, மாநில குழு உறுப்பினர் சௌந்தர்ராஜன், கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தலைவர் நக்கீரன், செயலாளர்கள் சுரேஷ்குமார், ஆனந்தராமன், பொருளாளர் ஐயப்பன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Also Read : கோயம்பேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்.

ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கட்டுமானத்தொழில் பெரும் பங்கு வகிக்கிறது. தற்போது கட்டுமான இரும்பு கம்பியின் விலை 80 சதவிகிம், சிமென்ட்டின் விலை 50 சதவிகிதமும் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.

Also Read : தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த பொய்யான புகாரில் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைதா ?

இதனால் கட்டுமானத் தொழில் வெகுவாக பாதிப்படைவது மட்டுமல்லாது அனைவருக்கும் வீட்டு வசதி மற்றும் அரசு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் மிகுந்த பின்னடைவு ஏற்படும்.

Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?

எனவே, தமிழக அரசு கட்டுமானக் கம்பி மற்றும் சிமென்ட் உற்பத்தியாளர்களின் விலை உயர்வு நடவடிக்கையை தடுத்து கட்டுப்படுத்தப்பட்ட நியாயமான விலையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்

சிமெண்ட் மற்றும் கம்பி உற்பத்தியாளர்களின் வர்த்தக போக்கை கட்டுப்படுத்துவதற்காக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும், எஃகு கம்பிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த அதன் ஏற்றுமதிக்கு உடனடியாக முழு தடையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Also Read : மவ்லானா ஆசாத் கல்விச் சங்கத்தை கலைக்கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவு, சிறுபான்மையினர் மீதான வெறுப்பரசியலின் வெளிப்பாடு.

இரும்புத்தாது மற்றும் எஃகு ஸ்கிராப் பொருட்களுக்கு இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது.

VIDEOS

RELATED NEWS

Recommended