- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கும்பகோணம் அருகே அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் பிரமாண்ட கல்யாணம்
கும்பகோணம் அருகே அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் பிரமாண்ட கல்யாணம்
ரமேஷ்
UPDATED: Feb 18, 2024, 2:43:05 PM
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா வங்காரம்பேட்டையில் உள்ள வேம்பு இம்மரத்தின் காற்று வெப்பத்தைப் போக்கி குளிர்ச்சியைத் தரும்.
நோயின் மூலத்தைப் போக்கும் ஆற்றல் வேம்பு மரத்திற்கும் உண்டு. இம்மரத்தின் பட்டை, இலை, சாறு, கொட்டை, எண்ணெய் யாவும் கிருமிநாசினியாகும்.
பூத தோஷங்கள், பேய், பிசாசு, பிரம்மராட்சதர் போன்ற தீய சக்திகளை விரட்டும் சக்தி இம்மரத்துக்கு உண்டு.
வேப்பமரமானது ஊருக்கு காவல் தேவதையாகவும், உந்து சக்தியாகவும் விளங்குவதால், கிராம காவல் தெய்வங்களான காளியம்மன், துர்க்கையம்மன், மாரியம்மன் கோயில்களில் வேப்பமரம் போற்றி வணங்கப்படுகிறது.
இந்நிலையில் உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்கவும், மழை பெய்யவும், வேப்ப மரத்திற்கு அரச மரத்திற்கு ஊரே வியக்கும் வகையில் பிரமாண்ட முறையில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமண விழா கமிட்டி உறுப்பினர்களில் கேட்டபோது", எங்க முன்னோர்கள் இந்த இரண்டு மரத்தையும் வைத்தார்கள் நாங்கள் இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்க ஊர்ல ஒரு திருமணம் எப்படி நடக்குமோ அப்படிதான் நடத்துகிறோம்.
பத்திரிக்கைகள் அடித்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து அனைவரையும் வரவேற்றும்
அது மட்டும் இல்லாமல் திருமணத்தை நடத்தி வைக்க புரோகிதரையும் அழைத்துள்ளதுடன், நாதஸ்வரம் மேளத்துக்கும் சொல்லியிருக்கோம்.
ஸ்டுடியோகாரங்ககிட்ட சொல்லி போட்டோவும் எடுத்து, ஊரே கூடி இந்த திருமணத்தை செய்கிறோம்.
Also Read : அண்ணாமலை என்கின்ற ஆடு வெட்டப்பட்டு 2024 இந்தியா கூட்டணி ஜெயிக்கும் - லியோனி
தொடர்ந்து சீர்வரிசை எடுத்து, மணமக்களுக்கு (மரத்தைதான்) புது துணி உடுத்தி, யாகம் வளர்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து சாப்பாடு போடப்பட்டது. திருமணத்திற்கு மொய் பணம் வைப்பது போல் எங்கும் ஊர் மக்கள் மொய் பணம் வைத்தனர்.