புனித ரமலானை வரவேற்போம் எனும் தொணிப்பொருளிலான நிகழ்வுகள்

அஷ்ரப் ஏ சமட்

UPDATED: Mar 3, 2024, 5:00:28 AM

ரமழானை வரவேற்ப்போம் என்னும் தலைப்பில் தெஹிவளை AL IMAM ASHARI COLLEGE AND ASSOCIATION OF ISLAMIC CHARITABLE PROJECTS-SL இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு wellawatte Maraine Grand ஹோட்டலில் இடம்பெற்றது.
 இன்னும் சில தினங்களில் ரமலான் நோன்புக்காக காத்திருக்கும் இந்த நிலையில் நோன்பின் மகத்துவம் மற்றும் அகீதா தொடர்பிலான சிறப்பு உறை ஒன்றினை கனடாவினைச் சேர்ந்த உலகளவிய

Also Read.

பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என மன்னை ராஜகோபால சுவாமி அரச கலை, கல்வி மாணவர்கள் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு பேரணி ,

கனடா salahutheen jumma பள்ளிவாசலின் பிரதம இம்மாமுமான அஷ்ஷைக் ஜீல் ஸாதிக் நிகழ்த்தினார்.

 இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட சர்வதேச பேண்ட் வாத்திய குழுவினரான அஷ்ஷைக் ஸஃத் - ஹார்மெனி பேன்ட்அல் ஹாஜ் ஹம்ஸா, மஹ்ஸூமி மற்றும் முஸ்அத் கரீம் ஆகியோரின் சிறப்பான கசிதா நிகழ்வும் பார்வையாளர்களின் வரவேற்பினை பெற்றது.

Also Read.உயிரிழந்த சாந்தனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

அதே வேளை இவர்களது ஆன்மீக பேச்சும் இடம்பெற்றது அத்துடன் ஸலாவாத் கிராத் மற்றும் , துஆப் பிராத்தனையும் நிகழ்த்தினார்கள்.

 இந்த நிகழ்வில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி மற்றும் சுரேஷ் கிட்ட சட்டத்தரணி மார்சூக் ஆகியோர் பிரதம பேச்சாளருக்கான நினைவு சின்னத்தை வழங்கி வைத்தனர்.

Also Read.புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு ஒரு தொகை அன்பளிப்பு

 இந்த நிகழ்வில் உலமாக்கள், துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended