• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மன்னை இராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மஞ்சப்பை வழங்கி விழிப்பணர்வு பேரணி.

பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மன்னை இராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மஞ்சப்பை வழங்கி விழிப்பணர்வு பேரணி.

தருண் சுரேஷ்

UPDATED: Mar 2, 2024, 7:42:19 AM

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க உலகெங்கும் பல்வேறு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. 

இது தவிர வேறு பல திட்டங்களும் கொண்டு வரப்பட்டன. அதில் முக்கியமானது மீண்டும் மஞ்சப்பை. இத்திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து மஞ்சப்பை போன்ற துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Also Read : போலீசார் பொய் வழக்கு போடுவதை நிறுத்த வலியுறுத்தி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவன் மனைவி கலெக்டரிடம் மனு.

இதனையொட்டி திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் மன்னை இராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கிடையே மஞ்சப்பை குறித்த விப்புணர்வு குறித்து பேரணியாக சென்றனர்.

கல்லூரியில் தொடங்கிய இப்பேரணி அஷேசம், மேல மறவக்காடு, இடையர்நத்தம், கண்ணாரப்பேட்டை மற்றும் துளசேந்திரபுரம் ஆகிய ஐந்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு முக்கிய வீதி வழியா சென்று பொதுமக்கள் இனி கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை எடுத்துச்சென்று பொருட்கள் வாங்கவேண்டும் , பிளாஸ்டிக் பைகளை இனி பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பியவாறு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனா்.

Also Watch : 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது இக்காட்சியை பார்க்கும் போது பழைய நினைவுகள் நமக்குள்ளே வந்து செல்கின்றது

அதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் து.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் அ. இலக்குமி பிரபா சிறப்புரையாற்றினார். 

ஊராட்சி மன்ற தலைவர்கள் வி.புருஷோத்தமன் ,சுமதி முருகானந்தம், ஜி.ரவி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்  தமிழ்த்துறை தலைவர் இல. பொம்மி விலங்கியல் துறை தலைவர் சி.இராமு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் முன்னதாக பேரா.சுப்ரமணி முகாம் அறிக்கை வாசித்தார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் காமராசு வரவேற்புரை வழங்கினார்.

Also Watch : ஜாபர் சாதிக் விவகாரத்தில் என்னை தொடர்புப்படுத்திப் பேசுவது வருத்தமளிக்கிறது -வீடியோ வெளியிட்டு இயக்குநர் அமீர் விளக்கம் 

நாட்டுநலப்ணித்திட்ட அலுவலர் ரா. ஜென்னி, அக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ப.பிரபாகரன் ஒருங்கிணைந்தார். மற்றும் நிகழ்ச்சியின் நிறைவாக பேராசியார் ந.சிவகுமார் நன்றியுரையாற்றினார். 

இந்நிகழ்வில் உழவாரப்பணி, மரம் நடுவிழா, கண் மருத்துவ முகாம் ,தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம், இளையர்களுக்காக காய்கறி தோட்டம் அமைத்தல் தொழில்நுட்ப பயிற்சி, சித்த மருத்துவ முகாம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

Also Read : முப்படைகளில் ஒன்றான இந்தியன் ஆர்மியில் அக்னிபாத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் வேலைக்கு சேர விண்ணப்பிக்கலாம்.

இதில் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் பல்துறை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள்  உள்ளிட்ட ஏராளமனோர் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended