அரசு பள்ளி வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை

மகேந்திரன்

UPDATED: May 22, 2023, 7:28:03 PM

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பிலில் உள்ள அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

லால்குடி அருகே அன்பில் கிராமத்தில்  மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக  இரண்டு வகுப்பறைகள் கொண்ட  கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு  அன்பில் அரசு ஆதிதிராவிடர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் கலந்துகொண்டு பூமி பூஜை பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் (பொறுப்பு) கீதா. ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி தலையாசிரியர் ராஜேந்திரன், அரசு வழக்கறிஞர் மதிவாணன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா சித்திரசேனன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜ்மோகன், முன்னாள் தலைவர் சௌந்திரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended