தருமபுரம் ஆதினத்திற்கு பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்த பாஜக, திமுக மற்றும் தொழிலதிபர்கள்.
செந்தில் முருகன்
UPDATED: Feb 29, 2024, 6:37:31 AM
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்;.
இவர்மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரம் ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி என்பவர் பிப்.25-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
Also Read : புடவை கொடுப்பதாக கூட்டத்திற்கு ஆள் சேர்த்த அதிமுக புடவை கொடுக்காததால் மேடையை பெண்கள் முற்றுகை
அந்த புகாரின் விபரம் பின்வருமாறு: ஆடுதுறையை சேர்ந்த வினோத், தருமபுரம் ஆதீனத்திடம் பணிவிடையாக பணியாற்றும் திருவையாறு செந்தில் என்பவருடன் கூட்டு சேர்ந்து, தன்னிடம் தருமபுரம் ஆதீனகர்த்தர் சம்மந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ உள்ளதாகவும்,
தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களிலும், டிவி சேனல்களிலும் அந்த ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதின மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவதாகவும்,
தனது சார்பில் திருவெண்காடு சம்பக்கட்டளையை சேர்ந்த ரவுடி விக்னேஷ் உங்களிடம் பேசுவார் எனவும் பணம் கொடுக்காமல் போலீசாரிடம் சென்றால் விக்னேஷ் மூலம் ரவுடிகளை கொண்டு மடத்தை சார்ந்தவர்களை கொலை செய்ய கூட தயங்கமாட்டோம் என்று ஆபாச வார்த்தைகளால் மிரட்டி பலமுறை என் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்தனர்.
நான் உயிருக்கு பயந்து மடத்தில் உள்ளவர்களிடம் பேசி பணம் பெற்று தருவதாக தெரிவித்தேன்.
பின்னர் இதுதொடர்பாக செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, செய்யூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், திமுக செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் அமுர்த.விஜயகுமார் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தன்னை தொடர்பு கொண்டு மடத்தினர் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதனை வெளியிடாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் கேட்டும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டுமென கூறியதாக கூறினார்கள்.
Also Watch : மருத்துவமனையில் கஞ்சா போதை ஆசாமிகள் ரகளை.
மேலும் அவ்வாறு அவர்கள் கேட்டும் தொகையை கொடுத்து பிரச்னை இல்லாமல் விசயத்தை முடிக்குமாறும், வீணாக ரவுடிகளிடம் பிரச்னை வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் அவர்கள் சொல்வதை செய்யக்கூடியவர்கள் எனவும் எங்களை அச்சுறுத்தும் வகையில் மடாதிபதியின் நேர்முக உதவியாளர் செந்திலின் கூட்டோடு மனஉளைச்சல் ஏற்படுத்துகின்றனர்.
Also Read : மாணவனை ஆசிரியர்கள் அடித்ததால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்.
இவர்களின் இந்த அச்சுறுத்தலால் மடாதிபதியும் மடத்தில் உள்ளவர்களும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளோம். எனவே காவல்துறை தலைவர் மடத்தினர் சம்மந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் கேட்டும் பணத்தை கொடுக்காத பட்சத்தில் அதை வெளியிட்டு மடத்திற்கும் மடத்தில் உள்ளவர்களுக்கும் கெட்டப்பெயர் உண்டு பண்ணவும் மடத்தில் உள்ளவர்களை கொலை செய்து விடுவதாகவும் ஆபாச வார்த்தைகளால் மிரட்டும் மேற்படி நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த புகாரில் விருதகிரி குறிப்பிட்டிருந்தார்.
Also Read : இது பாதயாத்திரை அல்ல, பிஜேபியினுடைய இறுதி யாத்திரை
இந்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, தொழிலதிபர் குடியரசு, ஆடுதுறை வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, அவர்கள் மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், தலைமறைவாக உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார், தருமபுரம் ஆதீன பணிவிடை செந்தில், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆன்மீகவாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.