திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்த இளைஞன் போக்சோவில் கைது.
S.முருகன்
UPDATED: Feb 14, 2024, 11:06:18 AM
கோயம்பேட்டை சேர்ந்த பெண் ஒருவர் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாகவும் வீட்டில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் ஏடிஎம் கார்டுடன் மகளை காணவில்லை என புகார் அளித்திருந்தார்
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த சதாசிவம்(24), என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரின் செல் போன் சிக்னல்களை வைத்து விசாரித்தபோது சேலத்தில் இருந்த இருவரையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது
காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டில் இருந்த பணத்தை எடுத்து வருமாறு கூறியதன் பேரில் சிறுமி பணம் எடுத்து சென்ற நிலையில் பணத்தை வைத்து மூன்று தினங்களாக பல்வேறு பகுதிகளில் இருவரும் சுற்றி திரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிறுமியை மீட்ட போலீசார் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த சதாசிவத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு