• முகப்பு
  • சென்னை
  • வளசரவாக்கத்தில் நண்பர்கள் இருவரை கத்தியால் வெட்டி பணம் பறித்த நபர் கைது.

வளசரவாக்கத்தில் நண்பர்கள் இருவரை கத்தியால் வெட்டி பணம் பறித்த நபர் கைது.

S.முருகன்

UPDATED: Sep 26, 2023, 8:25:26 PM

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் தனது நண்பர் வாசு என்பவருடன் சேர்ந்து போரூர் காரம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது  இருவரை வழிமறித்த நபர் ஒருவர் இருவரிடமும் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அவர்கள் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் வெட்டிவிட்டு அவர்களிடம் இருந்த 800 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.

பின்னர் இதுக்குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

இதில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கோவூர் பகுதியைச் சேர்ந்த யாக்கோபு(28) என்பது தெரியவந்தது இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கத்தியை  பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

VIDEOS

RELATED NEWS

Recommended