தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி பட்டறை

உமர் அறபாத் - ஏறாவூர்

UPDATED: Apr 28, 2024, 7:45:57 PM

தன்னபிக்கையுள்ள இளைஞர் , யுவதிகளினை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளைக் அடிப்படையாக கொண்டு  வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் H&D தாதியர் பாடசாலையின் ஏறாவூர் கிளையினுடைய தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கான தன்னம்பிக்கை வழுவூட்டும் பயிற்சி பட்டறை ஒன்று இடம்பெற்றது.

இத் தலைமைத்துவ பயிற்சி பட்டறைக்கு தேசிய இளைஞர் படையணியின் கிழக்கு மாகாண பணிப்பாளர் இமேஸ் குலதுங்க  விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

தாதியர் பாடசாலையின் பணிப்பாளர் எம்.எம்.எம் நஜீம் தலைமையில் தாதியர் பாடசாலையின் ஏறாவூர் பிராந்தியத்தினுடைய திட்ட மேலாளர் ஜே.ரனுஜா மற்றும் கிளை முகாமையாளர் எம்.யூ.எப்.றுஸ்னாவின் வழிகாட்டலில் தாதியர் பாடசாலையின் 

நிர்வாக உத்தியோகத்தர் ஆர்.லோகிதா அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய இளைஞர்படையணி வாழைச்சேனை பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியான லெப்டினன் கேனல் எம். எச்.எம். ரவூபின்  நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளராக பயிற்றுவிப்பாளர் டி.எம்.ஜயசேன மற்றும் டப்ளியூ.எம்.ஐ.பிரியதர்ஷன அவர்களினால் தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கு பயிற்சிகளும் தலைமைத்துவம் சார்ந்த விளக்கங்களும் தெளிவூட்டப்பட்டன.

பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்குநிகழ்வின் இறுதியில் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி லெப்டினன் கேனல்

 எம். எச். எம்.ரவூப் மற்றும் H&D தாதியர் பாடசாலையின் பணிப்பாளர் எம்.எம்.எம் நஜீம் அவர்களின் கரங்களினாலும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 

VIDEOS

Recommended