- முகப்பு
- மருத்துவம்
- தேசிய மாற்றுமுறை மருத்துவ மன்றத்தின் 10வது ஆண்டு பட்டமளிப்பு விழா.
தேசிய மாற்றுமுறை மருத்துவ மன்றத்தின் 10வது ஆண்டு பட்டமளிப்பு விழா.
Bala
UPDATED: Jul 3, 2024, 4:14:00 AM
தேசிய மாற்றுமுறை மருத்துவ மன்றத்தின் 10வது ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.
குத்தாலம், தேசிய மாற்றுமுறை மருத்துவ மன்றத்தின் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை தியாகராயர் நகர் சர்.பி.டி. தியாகராஜர் ஹாலில் நடைபெற்றது.
தேசிய மாற்றுமுறை மருத்துவ மன்றத்தின் தலைவர் டாக்டர். குத்தாலம். செல்வராஜ் தலைமை வகித்தார். நாகர்கோயில், பயோனீர் குமாரசுவாமி கல்லூரி பேராசிரியை சுபத்ரா செல்லத்துரை வரவேற்புரை நிகழ்த்தினார்.
வி. மாணிக்கம், காவல் கண்காணிப்பாளர் ஓய்வு, கே. ராஜாராம், காவல் உதவி ஆணையர் ஓய்வு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உ. கதிரவன் திரைப்பட நடிகர் பூவிலங்கு மோகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சான்றுகள் பெற்ற இளம் மருத்துவர்களை வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி. ஹண்டே மாற்றுமுறை மருத்துவத்தின் அவசியம் மற்றும் அங்கீகாரம் குறித்தும் மாற்றுமுறை மருத்துவர்களின் கிராமப்புற சேவை குறித்தும் பேசினார்.
மேலும் ஏழ்மையில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் சிக்கன மருத்துவம் மாற்றுமுறை மருத்துவம் என்று மாற்றுமுறை மருத்துவத்தை புகழ்ந்து பேசியதுடன் மாற்றுமுறை மருத்துவர்களின் மக்கள் சேவை சிறப்பாக அமைய வேண்டும் என்று சான்றுகள் பெற்ற மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து மாற்றுமுறை மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுமுறை மருத்துவத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வரும் மாற்றுமுறை மருத்துவப் போராளி குத்தாலம் டாக்டர் செல்வராஜுக்கு வெற்றி வேந்தர் விருது என்ற விருதினை தவப்புதல்வி இதழாசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை வழங்கி கவுரவித்தார்.
நவீன் பைன் ஆர்ட்ஸ் பன்னீர்செல்வம் மற்றும் மேன் பவர் சர்வீசஸ் பீர்முஹம்மது ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்து தந்தனர். கோவலன் கலை மன்றம் விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தேசிய மாற்றுமுறை மருத்துவ மன்றத்தின் பொருளாளர் பாலசேகரன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.