தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பலத்த காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் ஒடிந்து சேதம்.
ராஜா
UPDATED: May 6, 2024, 8:51:12 AM
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த விவசாயி முத்தையா மற்றும் அவரது மகன் கூடலிங்கம் ஆகியோர் கம்பம் கூடலூர் ரோட்டில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு பின்புறம் உள்ள சாளமலை ஈஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள தனுஷ்கோடி என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது சுமார் 10 ஆயிரம் நாழிப்பூவன் வாழை பயிர் செய்து விவசாயத்தை கவனித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை கம்பம், கூடலூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த பலத்த காற்றில், விவசாயி முத்தையாவின் பத்து மாத வளர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான வாழைகள் ஒடிந்து சேதமானது.
சேதமடைந்த வாழைகள் அனைத்தும் இன்னும் ஓரிரு மாதத்தில் பலன் எடுக்கும் பருவத்தில் இருந்ததால் விவசாயிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இகுறித்து விவசாயி கூட லிங்கம் கூறுகையில், பக்குவமாய் பாதுகாத்து வளர்த்து வந்த வாழைகள் இன்னும் இன்னும் ஓரிரு மாதத்தில் பலன் எடுக்கும் பருவத்தில் இருந்தபோது திடீரென பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் ஒடிந்து நாசமாகி உள்ளது.
இதனால் லட்டசக்கணக்கான ருபாய் இழப்பு ஏற்பட்டள்ளது. அரசு இதை கருத்தில்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.