• முகப்பு
  • கல்வி
  • 9ம் வகுப்பில் சேரும் மாணவ மாணவிகளுக்கு மாலை மரியாதை செய்து, மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

9ம் வகுப்பில் சேரும் மாணவ மாணவிகளுக்கு மாலை மரியாதை செய்து, மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

சண்முகம்

UPDATED: Jun 13, 2024, 10:56:58 AM

சிதம்பரம் அருகில் உள்ள கிள்ளை பகுதியில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி குடும்பங்கள் உள்ளது, இந்த பேரூராட்சியின் தலைவராக இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பட்டதாரி பெண் மல்லிகா முத்துக்குமார் இருக்கிறார்.

இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர், தளபதி நகர், MGR நகர், சிசில் நகர், கிரீடுநகர் ஆகிய ஊர்களில் வசிக்கும் இருளர் மக்களுக்கு MGR நகரில் ஒரு நடுநிலைப் பள்ளியும், கலைஞர் நகரில் ஒரு நடுநிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது.

இந்த பள்ளி மாணவர்கள் 8ம் வகுப்புக்கு மேல் படிக்காமல் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர்..

எனவே, இதை தடுக்கும் பொருட்டு 8ம் வகுப்பு முடித்ததும் ஒரே நேரத்தில் அனைவரின் மாற்றுச் சான்றிதழையும் பெற்றோர் மூலம் பெற்று கிள்ளையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்,

இதனால் 9ம் வகுப்பில் சேரும் மாணவ மாணவிகளுக்கு மாலை மரியாதை செய்து, மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்து முதல் நாள் வகுப்பில் விடப்படுகின்றனர்.

அப்படி வரும் புதிய மாணவர்களை மேல்நிலைப்பள்ளியின் ஸ்கவுட் மாணவர்கள் கைதட்டியும், சல்யூட் அடித்தும் வரவேற்றனர்.

பின்னர் அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புக்கு வழியனிப்பி வைத்தது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது..

இந்த ஏற்பாடுகளை வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் தொடர்ந்து செய்து வருகிறார்!

 

VIDEOS

Recommended